முக்கால் முதுகு நிஷிதா

முக்கால் முதுகு நிஷிதா*
@@@@@@@@@@@@@@@@@@@@@@

“முக்கால் மதியாய் முதுகைக் காட்டும் ரவிக்கை அணிந்தவளே

“எச்சரிக்கையாய் இரு, புத்திக் கூர்மையுள்ள” என்ற அர்த்தங்கள் தரும்

பெயரடையைப்# பெயராகக் கொண்ட பேரழகியே பட்டணத்துப் பொண்ணே எப்போது வந்தாய், நலந்தானா எல்லோரும்? அடியே

நிச்சித்தா உன்னைத்தான் கேட்கிறேன்”.

@@@@@@@@@@@@@@

“பட்டிக்காட்டு பாட்டியே, முனைவர் பட்ட மாணவர் பொல் தள்ளாத வயதிலும் பெயராய்வு செய்பவரே, என் பெயர் நிஷிதா*;

'நிச்சித்தா'என்று பள்ளிப் படிப்பைத் தாண்டாத நீங்களென் பெயரைத் தவறாக உச்சரிக்கிறீர்”.

@@@@@@@@

“ஏண்டி நிச்சித்தா, நம்மொழி செம்மொழி உலகின் முதன் மொழி என்பதைக்கூட அறியாத நீ, படித்தவளா கைநாட்டுப்

பேர்வழியா? பெயருக்குப் பஞ்சமா உலகின் முதன் மொழியில்? பிறமொழிகளில் உள்ள பெயரடைகளையும்# பெயராக வைத்துக்

கொளவதும் உங்களுக்குப் புதுமையோ?

இந்தி மொழி பேசுவோர் உன் பெயரைக் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார் நம் செம்மொழி பற்றி?

பெயருக்கும் பஞ்சமுள்ள மொழியெல்லாம் எப்படி செம்மொழி ஆகுமென்று கேட்டுவிட்டால் அதற்கென்ன பதிலை நீ தருவாய்?”

”தம்மொழியில் பெயரில்லா நிலையினிலே நம்மொழிக்கு ஓடிவரும் தமிழர்களுக்கு தாய்மொழிப் பற்றும்

தன்மானமும் இல்லை போல் தெரிகிறது” என்று சொல்லி நகைத்திட்டால் நமக்கது அவமானம் ஆகாதோடி?

“இந்தியைத் தாங்கி நிற்கும் சமஸ்கிருதம்; அதை விலக்கி வைத்துவிட்டால் இந்தியேது? வளமான மொழியொன்றின் தயவால்

வாழும் மொழி இந்தி மொழி என்பதைநீ அறிவாயா நிச்சித்தா?

நம்மொழி தான் திராவிட மொழிகளுக்கு ஆதியும் அந்தமுமாய்
இருக்கிறது.

தமிழோடு சமஸ்கிருதம் வெவ்வேறு காலங்களில்/ விகிதங்களில் கலந்து பிறந்தனவே தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு மொழிகள்.

நந்தமிழ் தந்த பழஞ்சொற்கள் மருவிய சொற்களையெல்லாம் உதறிவிட்டால் அம்மொழிகளும் இந்தியைப் போல்
தனித்தியங்க முடியாத உதிரிப் பூக்களாம்!”

@@@@@@@@

”சிற்றூரில் வாழுகின்ற சிறுத்த பாட்டியே வயாதான காலத்தில் மொழி ஆய்வு எல்லாம் உமக்குத் தேவையா?

என்ன சாதிக்கப் போவதற்கு பெயராய்வைச் செய்கின் றீர்?


உங்கள் காலம் முடிந்து அரை நூற்றாண்டு ஆகிறது இதுஎங்கள் காலம்:

நினைத்தபடி வாழ்வதும், விரும்பியதை உண்பதும் உடுப்பதையும் கண்டும் காணாமல் விட்டதே உங்களுக்குப் பிற்கு வந்த தலைமுறை தானே.

நாற்பதைக் கடந்து, இளநரை விழுந்தவரும் திரை நாயகர் நாயகியர் போல் ஆடை அணிவதும், முடியலங்காரம் செய்வதும்

இன்றைய நாகரீகம் என்பதை அறியாமல் எங்களைக் குறை சொல்வதா?

இளம் நாயகர் எல்லாம் தாடியர்கள், கீழ்ப்பகுதி தலைமுடியை மிகவும் குறைத்து, மேல்பகுதியில் அதிக முடி வைத்திருப்பார்; நெஞ்சைக் காட்டும் சட்டை, முக்கால் கால் அல்லது
அரைக்கால் சட்டை.

நாயகியரின் நிலையை நான் சொல்லத் தேவையில்லை. திரைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து
புழுங்கிடுங்கள்.

செம்மொழி பற்றியும் ஏதேதோ சொன்னீர். தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் வளர்ச்சித் துறை வல்லுநர்களே

அதைப் பற்றிக் கவலைப்படாத போது, பட்டிக்காட்டுப் பாட்டிக்கு செம்மொழிமேல் ஏனோ இந்த அக்கறை?


பாரதிக்கு,
தமிழ்த் தேனாய் இனித்திருக்கும். எங்களுக்குப் பிடித்ததெல்லாம் திரைத் தமிழ், திரைத் தமிழே.

பல வண்ணங்கள் ஆடைக்கு அழகு தருவது போல,
கலப்படத் தமிழே எங்களுக்கு இனிமை தரும் தமிழாம்.

நாங்கள் திரைத் தமிழ்க் கடலில் மூழ்கி நவரத்தினங்களை எடுத்தவர்கள்;

முத்தோடு
முடிவது அல்ல எங்கள் காலம். திரை நாகரீகமே உன்னதமானது என்பதை அறிவீரோ?

அதைப் பின்பற்றாத இளையோரெல்லாம் உங்கள் வயதை
மனதளவில் எட்டியவர்கள்.

அவர்களை நாங்கள் இளையோராக மதிப்பதேயில்லை.

பாட்டியே பாட்டியே, பட்டிக்காட்டுப் பாட்டியே, இனிமேல்
பிறமொழி பெயர் பற்றியும், நாங்கள் பேசும் மொழி பற்றியும், நாங்கள் விரும்பி உண்ணும் வேதிப்பொருள் கலந்திருக்கும் சாக்கடையோர உணவகப் பண்டங்கள் பற்றியும், நாங்கள் அணியும் அரைகுறை ஆடை பற்றியும், நாங்கள் போற்றும் நாகரீகம்
பற்றியும் பேசிப்பேசி பொழுதைக் கழிககாதீர்!

என் பேரைத் தபபாக உச்சரிப்பதைவிட்டு “இங்கே வா புள்ளே” என்றழைத்தாலே
போதும்.

இளையோரின் அகராதியில் மூத்த குடிமக்களுக்கு இடமில்லை.

நாங்கள் மாறப்போவதில்லை. நாங்கள் பிடித்த
முயலுக்கு மூன்று கால்; நம்பினால் நம்புங்கள், இல்லையேல் பொக்கை வாயை மூடி புகையிலையைச் சுதப்பி கண்டிடுங்கள்பேரின்பம்.


பெயராய்வு மட்டும் இனி வேண்டவே வேண்டாம். ####

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத திரை வாழ்க்கை என்று சங்கே முழங்கு, சங்கே முழங்கு, சங்கே முழங்கு”.

@@@@@@@@@@@@@

”போடீ. போடீ போக்கத்தவளே; நாய்வாலை நிமிர்த்த எண்ணியது என் தவறு. எப்படியோ போ, எனக்கென்ன வந்தது.

நீங்கள்
எதுவும் செய்ய, பெற்றவரே துணையிருக்கும் போது பாட்டி பாட்டனெல்லாம் வேடிக்கை பார்த்து மனதுக்குள் புழுங்கி
மரியாதையைக் காத்திடத்தான் வேண்டும்.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
• * Nishita (Adjective) = Alert, sharp
• # Adjectives

எழுதியவர் : மலர் (21-May-17, 6:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 432

மேலே