உன்னையே நீ நேசி

உன்னையே நீ நேசி - பின்
உயிர் காற்றை சுவாசி ...
கண்ணாடி முன் நில் -
காலை வணக்கம் சொல் ...
உனக்குள் நம்பிக்கை தொடுக்கும் -
உலகம் இரு கை கொடுக்கும் ...
புன்னகையிட்டு பூமனதை தடவிக்கொடு ...
புதுஉலகம் உனக்கென்று உரிமை எடு ...
சோதனையே சுகம் என்று சொல்லி வை ...
சாதனையை சரித்திரத்தில் கிள்ளி வை ...
உன்னையே நீ நேசி - பின்
உயிர் காற்றை சுவாசி ...