தொடத் தூண்டும் உன் இதழ் அழகு

வானவில்லின் நிழலோ!
இவள்,
பிரம்மன் செய்த சிலையோ!
மழைத்துளியின் வடிவோ!
இல்லை!
வழித்தவறிய தேவதையோ!

கார்கூந்தல் பார்த்து,
நிலவும் மறைய!
இவள்!
முகம் கொஞ்சம் பார்த்தால்,
கவிதைகள் தோணும் நிறைய!

கண்ணாலே கவர்ந்திழுப்பாள்!
மலர்களும் மரணத்தை
விரும்ப தூண்டிடுவாள்!
கண்ணிமைக்கும் நேரத்தில்
சில்மிஷங்கள் செய்திடுவாள்!

வண்ணத்துப்பூச்சி,
மலர் தவிர்த்து,
உன் இதழ் தேடும்,
மர்மம் எதுவோ?

கடற்கரை நீ சென்றாலே!
ஆழிப்பேரலை,
மோகம் கொண்டு,
உன்னை முத்தமிட முயன்றிடுவான்!

உன் சிரிப்பைக் கண்டாலே!
இந்திரனும்,
அவன் சபையில்,
ரம்பையை துரத்திடுவான்!

கொஞ்சும் தமிழ் அழகு!
கன்னக்குழி சிரிப்பு அழகு!
கவர்ந்திழுக்கும் கன்னங்கள் அழகு!
நெற்றிப் போட்டு அழகு!
திமிர் பிடித்த பேச்சு அழகு!

தொடத் தூண்டும் இதழ் அழகு!
வெட்கம் கொள்ளும்,
உன் பெண்மை அழகு!
சின்னஞ்சிறு சீண்டல் அழகு!
உனது பார்வை அழகு!

எழுதியவர் : Sherish பிரபு (24-May-17, 12:49 pm)
பார்வை : 4135

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே