காதல்நெறி தவறாதே

கண்மூடும் வேளையிலும் மறையாக் காதல் கண்டேன் கண்ணே...
கண்ணைமூடி முழிக்கும் முன் மறைகிறதே இந்தக் காதல்...
எல்லாம் வேஷமோ?
இல்ல,
தெருநாய் குணங்களின் தாக்கமோ??
ஏதாடா இயேசப்பா...
ஏதும் அறியேன் நான்...
பாவிகளாகிய இவர்களை மன்னித்து இரட்சிப்பீரோ???

வெளிப்படட்டும் உண்மையின் ரூபம்...
வெளிப்பட மறுத்தால் இதயத் தோலை உரித்துப் பார்ப்போம்...

கேளாடா காதலொழுக்கம்...
ஒருவனுக்கு ஒருத்தியென்பதை மறந்தே நீ தேடாதே
ஊடலின்பம்...

உள்ளிருந்து எழுகிறதே ஒரு உண்மையின் கோபம், " ஒன்று கூடிக் கல்லால் அடித்துக் கொல்லுங்களடா அந்த ஒழுக்கங்கெட்ட நாய்களை. ", என்றே...

இருப்பினும் சுய நல்லொழுக்கத்தால் தடைப்பட்டவனாய் காத்திருக்கிறேன் காலம் தரும் கொடிய தண்டனையை எண்ணியே...

அன்றே சொல்லிவிட்டானடா அந்தக் கவிஞன், கண் போன போக்கிலே கால் போகலாமா என்று தொடங்கி, ஒழுக்க நெறிவிளக்கத்தை...
அதைக் கேட்டும் இவர்கள் திருந்தவில்லை...
மனம் வருந்தவேயில்லை...
போற்ற வேண்டியதெல்லாம் தூற்றி, பகட்டு வாழ்க்கையிலேயே பாழாய் போகிறார்களே...
இன்னும் போவார்களே...

இவ்வளவு சொல்கிறேனே,
உங்களுக்கு இன்னும் புரியலையா???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-May-17, 7:09 pm)
பார்வை : 274

மேலே