யாருண்டு

===========

நோயினது வரலாற்றை நுற்பமுடன் கண்டறிந்து
நுடக்குகின்ற வைத்தியர்கள் நூறாயிர முண்டு
பேயினது வரலாற்றை பெரிதாகக் கண்டறிந்து
பிடித்தடக்கிப் பார்ப்பதற்குப் பேயோட்டிக ளுண்டு
நாயினங்கள் தெருநிற்க நாசூகாய்ப் பிடித்து
நஞ்சூட்டிக் கொன்றழிக்கும் நாட்டினரு முண்டு
தாயினைமு தியோரில்லம் தள்ளிவிடும் மாந்தர்
தனையடக்கி வைப்பதற்கு துணிந்ததெவ ருண்டு?
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-May-17, 3:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 86

மேலே