அதிர்ஷ்டம் இல்லாத இவள் வாழ்க்கை - சகி
என் வாழ்க்கை .
கண்ணீருடன் கடந்துவந்த
என்வாழ்க்கைப்பாதை .....
என் சின்ன ஆசைகளும்
என் வாழ்வில் சிதறிவிட்டது.....
என்கனவில்க்கூட எனது
ஆசைகள் கருகிவிட்டது .....
பணமில்லையென்றால்
எவ்வுறவிடமும் மதிப்பும்
மரியாதையும் இழந்து
சில வலிகளுடன் அவமானங்களுடன் வாழவேண்டிவரும் ......
அனுபவித்து விட்டேன்
என் வாழ்வில் முழுமையாக .....
இருளில் தனிமையில்
அழுகிறேன் என் வாழ்க்கைப்பயணத்தை எண்ணி ......
நெருப்பாக சுடுகிறது
என் வாழ்க்கை ....
அனலில் கருகுகிறது
என் வாழ்க்கை பயணம் ....