தோள்கொடு தோழா!

தோள் கொடு தோழா!
தோல்விகள் நமக்கில்லை என்று
தோள் கொடு தோழா!

கங்கையும் காவேரியும் கரை புரன்டோட
இலங்கையில் ஓடிய இரத்த ஆறு
நினைவில் ஓட

வாடிவாசல் வெற்றி கண்ட
நெடுவாசல் வெற்றிகான தோள் கொடு தோழா!

தமிழன் என்ற இறுமாப்புடன் இனி
தோல்வி உனக்கில்லை என்று தோள் கொடு தோழா!

விண்மீனாக மண்ணில் வாழ்ந்தாலும்
அலை கடல் ஓயதா எம் பணி மீன் பிடி
பணியேன மீனவ தமிழன் உரிமை
கேட்டிட தோள் கொடு தோழா!

காவேரி கரை மட்டும் தமிழனுக்கு
சொந்தமில்லை
தண்ணீரும் சொந்தம் என்று முறையீடு தோழா! தோள் கொடு தோழா!

காலம் காலமாய் ஈழ பிரச்சனை கண்டு ஆண்டு தோறும் காவேரி பிரச்சனை கண்டு இப்போது
மீத்தேன் கடந்து ஹட்ரோகார்பன்
வரை பொறுத்தது போதும் புறப்புடு தோழா!

தமிழ் உணர்வுடன் உன் உதிரம் தந்து
காளை என தமிழ் உரிமையை மீட்டு வாடிவாசல் துறந்த தோழா தோள் கொடு! தோழா

எழுதியவர் : மருது என்ற மருதராஜன் (26-May-17, 2:05 pm)
பார்வை : 449

மேலே