ஆண் பெண் நட்பை சந்தேகிக்கும் சமூகமே

தோழா!
இதை ஆண் வாய்மொழியில் நட்பாகவும் பெண் வாய்மொழியில் சந்தேகத்துடன் ஏறிடும் சமூகமே
உனக்குத் தெரியுமா!
எங்கள் உரையாடலில் காதல் இல்லை என்று
எங்கள் எதேச்சையான தொடுதலில் காமம் இல்லையென்று
எங்கள் நட்பின் வேர் நீ அறிவாயா
என் முன்னால் என்னை சீண்டி தூற்றி
என் பின்னால் என்னை எவரேனும் தூற்ற நேர்ந்தால் "அவள் என் தோழி"
என சட்டை பிடிக்கும் தருணத்தில் என் விழியோரம் எட்டிப்பார்க்கும் கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுவாய்?
இத்தனை கர்வத்துடன் நட்பு வளர்த்தும் பெண்ணவள் திருமணத்தின் பின் நட்பில் இழையோடும் பிரிவுக்கு நானே காரணம் என மார்தட்டி பெருமை கொள்...
முதலில் காதலையும் காமத்தையும் பற்றி தெளிந்து வா
எங்கள் நட்பை அப்போது தான் பகுத்தறிவாய்.