நட்பு கொள்புரிந்திடும் நட்பை பற்றி

தோழியொரு வரம்
தோண்டி எடுத்திட முடியா
வைரம் அவள் மனம்....
வைத்திடு உன் கலசத்தில்
வையகம் உன்வசம்

நீ தொட நான் உருகமாட்டேன்
நீயும் நானும் நெருப்புதான்
நம் நட்பினிலே
நாரதர்கள் பல சொல்ல பிரியாது
நட்பென்று வாழ்த்திட முயல்கையில்
நாசமாய் போன இந்தஉலகம்
சேற்றை வாரிவிட்டதேன் நட்பை
புரிந்திடா நாறல்கள் நகத்திய பல
புதிர்களால் புன்னகை ஒழியவில்லை
புதுமைதான் பிறந்தது திருமணத்தினில்
புதிய உறவால் புரியாத நம் நட்பை
புதுப்பித்து கொண்டோம் இன்னோர் நட்பியலின்
அத்தியாயத்தால்

முதிர்வுகள் இல்லாத நட்பில்லை
நம் நட்பென்று வாழ்த்திடுவாம்
முதுமையில் மூழ்கும்வரை
சிந்தித்திடு மனிதா நட்பை விளங்கிட
நீ நட்பு கொள்

எழுதியவர் : அருண் (25-May-17, 9:20 pm)
பார்வை : 373

மேலே