குழலோடு உறவு

வானத்தில்
முகவரியை
தொலைத்த
முகிலைப்போல்
உன் முகத்தோர
கார்குழல்
அலைபாயுதடி
அது என்னை
நலமா நலமா என்று
நலம் விசாரிக்கும்
பங்காக உள்ளதடி
உன் மெல்லிய விரல்கள்
அவைகளை இழுத்து
உன் காதோரம்
சேர்க்கும்போதெல்லாம்
அவனிடம் நீங்கள்
பேசாதீர்கள்
என்பதுப்போல்
உள்ளதடி அது எனக்கு
நீதான் என்னிடம்
பேசவில்லை
விட்டுவிடு பாவம்
உன் முகத்தோர குழலாவது என்னிடம் பேசட்டுமே...

எழுதியவர் : செல்வமுத்து.எம் (27-May-17, 9:51 am)
பார்வை : 156

மேலே