நினைவு

உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய் கலந்துவிட்டோம்...
****
உனக்கு நானும் எனக்கு நீயும்
ஒரு போதும் உரிமையில்லை,
என்றே - உன் உதடுகளால்
உச்சரிக்கபப்படுவது மெய்யாவதில்லை....

மாறாக...

உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய் கலந்துவிட்டோம்
என்பதே காலத்தால்
அளிக்கப்படாத உண்மையாகும்....

உணர்வுகள் மௌனித்தாலும்
விழியின் பார்வைகளுக்கு
முன்னே ஆயிரம்
எண்ணங்களை உருவாக்கும்
"உள்ளம்".....
ஒருநிலைப்படுத்திக்கொள்.....

திரும்பிப்பார்,,,,,, ,!!!
உன் கவலைகளின்
விளிம்பில் நான் கைகள் ஏந்தி நிற்பேன்
உன் சந்தோசத்தினை சுமந்தவனாய் .....

மரணம் உன்னைத்தொடும் வரை
மனதைத்தொட்ட
கனவுகளோடு வாழ்ந்துபார்....
உலகை வென்றது நீயாக
உணர்த்தும் உன் சந்தோசம்.....

புல்லாங்குழல் இசைத்ததில்லை
விரல்களின்றி ஒரு போதும் ,,
நீ என்னை இசைக்க மறுப்பது ஏன் ??

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (29-May-17, 8:18 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : ninaivu
பார்வை : 115

மேலே