கனிந்துவரும் காதல்

கனிந்து வருவது கனி போல
காதலும் கனிந்து வரும் கனிதான்
கன்னி கனி தானாய் கனிவது
தேடி தேடி அலைந்தாலும் பலருக்கு
செல்வம் கிட்டுவதில்லை -ஆனால்
சிலருக்கோ தேடாமலேயே வீட்டு
கதவைத் தட்டி வந்தடையும் செல்வம்
காதலும் அப்படித்தான்
பார்வை ஒன்றே போதும் என்று
தவம் கிடந்து காத்திருந்தும் கன்னியவள்
பார்வை கூட கிட்டுவதில்லை பலருக்கு
ஆனால் ஒரே பார்வையில் சிலர்
பார்வை சங்கமிப்பது அவரவர் செய்த
காதல் சங்கல்பம் அதன் பலனும்
அதனால் காதல் வரும் என்று காத்திராதே
அது உனக்கு விதி என்றால் தானாக வந்து
கனிந்திடும் மாங்கனிபோல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-17, 9:08 am)
பார்வை : 117

மேலே