உ -சிவன்

உன்னை உணரவில்லை
உள்ளுள் உந்தும்
உண்மை உணரவில்லை
உன்னை உருவகப்படுத்தியதால்

உன்னை காணவில்லை
உலகெங்கும் உழன்றும்
உன்னை காணவில்லை
உண்மை உரைக்கவில்லை

உள்ளம் உருகிட
உன்னை தொழுதிட
உள்ளம் தெளிந்திட
உணர்ந்த உண்மை

உண்மை அன்பில்
உறைந்தவன் சிவனென

எழுதியவர் : ஜெகன் ரா தி (31-May-17, 9:53 pm)
பார்வை : 1205

மேலே