இனியொரு விதி செய்வோம்
கலித்துறை :
அண்ட மதிலாண் மகனின் அழுக்கால் தோன்றும்
வெண்ப னியுடற் உறிஞ்சும் வெயிற்போல் காமம்
மண்ணின் மலரைப் பறித்துக் கசக்கி வீசும்
கண்ணீர் நதியில் கரையு முயிராய் மாற்றும்...
சட்ட விதிசல் லடையாய் இருப்ப தாலே
பட்டுத் துகிலில் பருவ முகிலோ வந்தால்
மொட்டுக் கிழிந்து முகமும் அழிந்து போகும்
வெட்ட வெளியின் கொடுமை நிதமும் இங்கு...
குற்றம் முடிந்து விரிக்கும் குடைகள் வேண்டாம்
முற்றம் வருமுன் முடிவு மெடுத்தல் வேண்டும்
செற்றம் களைந்து செழிக்கும் புவியாய் மாற்ற
இற்றைப் பொழுதே இனியொ ருவிதி செய்வோம்...
(தேமா புளிமா புளிமா புளிமா தேமா)