ஏன் படைத்தாய்
உலகை ஆளும் இறைவனே
எனக்கு உணவு கொடுத்தாய்...
உடை கொடுத்தாய்...
வசிக்க இடமும் கொடுத்தாய்...
என் அருகிலுள்ள உறவுகள்
கந்தல் ஆடையில்
பசியால் துடித்து
கண்துஞ்ச இடமின்றி தவிப்பதைப்
பார்த்திடும் விழிகளைத் தந்தும்
பார்த்தே இரசிக்கும்
இரக்கமற்ற
இதயம் படைத்து விட்டாயே......