இளமையில் வறுமை

எண்ணெய் தேய்க்காது
கருமை மறையும் நிறத்துடன்
சிக்குண்ட தலைமுடி...
கண்களோ?...
ஏக்கத்தின் பார்வையிலே
கண்ணீரும் வற்றி
காய்ந்த சோலையாய்...
கன்னங்களின் இருபக்கமும்
சிரிக்கமாலே
ஆழமான குழிகள்...
எழுந்திட முடியாமல்
கால்கள் இரண்டும் தள்ளாட
நெஞ்சின் எலும்புகளோ?...
என்னை எண்ணிக்கொள் என்றே
எழுந்து முன் நிற்கிறது...
எலும்பும்
உள்ளோடும் செங்குருதியுமே
உடலின்
மொத்த எடையென்று காட்டுகிறது...
வாய்க்கு வந்த பூட்டால்
பள்ளம் போன்று
உடம்போடு ஒட்டிக் கொண்ட
வயிறோ?...
பசியால் சத்தம் போடுகிறது...
உணவுக் குழலோ?...
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால்
மூச்சுக் குழலோ?...
முற்றிலும் முடங்கிட துடிக்கிறது
ஏழைச் சிறுவனுக்கு......