அனாதையாகிறேன் நீ இருந்தும்

எங்கேயோ கைவிடப்பட்ட
ஒற்றை பாய்மரம் ஏளனம் செய்கிறது
தனித்து விடப்பட்டது நான் மட்டும் அல்ல; நீயும்தானென !!!!!
நிலவெங்கே சிரிக்கிறது
தன்னை போலவே நிற்கதியாய்
தனித்து விட்டு தவிக்கிறாயென்று .....
குப்பைகளுக்குள் வீசும்
பால் மனமாய் :தூக்கி ஏறிய பட்ட
அனாதையாகவே உணர்கிறேன்
அனாதையாக்கப்பட்ட குழந்தை போல...
திரும்பி வர போவதேயில்லை என தெரிந்தும்
எதிர்பார்க்கிறேன்
சுடு காட்டின் வாசலில் காத்திருக்கும்
உறவுகளை போல .....