கக்கன்---நேர்மையாளர் வாழ்ந்த மண் --தமிழ்நாடு

கக்கன் போலீஸ் மந்திரியாக இருந்த சமயம். அவரது மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. முழுத் தகுதி இருந்ததால் பணி வழங்கப்படுகிறது. தந்தையிடம் வந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டுகிறார் அதனை வாங்கிப் பார்த்த கக்கன், கிழித்துப் போட்டு விட்டு, மகனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,,' நான் போலீஸ் துறை மந்திரி... எனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?. அதனால் இந்த உனக்கு வேலை வேண்டாம்' என கோபமாகிறார். அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் வாழ்ந்த மண் இது. கடைசிக் காலத்தில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வழியின்றி, இறந்து போனார் கக்கன்.

எழுதியவர் : (2-Jun-17, 6:14 am)
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே