காதல்

உந்தன் கண்களிரண்டும் கொண்டு
என் முகத்தைப் பார்த்து பெண்ணே
நிலவொத்த உன் விழிகள் இரண்டால்
நேசப் பார்வை வீசிவிடு அந்த
பார்வையின் தண்ணொளியால்
என் உள்ளதை குளிரவிடு -இது நீ
என் காதல் கோரிக்கைக்கு தரும்
அங்கீகாரம் என்று நான் நினைப்பேன்
உன் மீது நான் கொண்ட காதலை
உந்தன் காலடியில் காணிக்கையாய்
வைத்திடுவேன் கண்ணே -அது வெறும்
காணிக்கை என்று மட்டும் எண்ணிவிடாதே
அது எந்தன் உயிர் அது உன் உயிரோடு
கலந்து உறவாட ஏங்குகின்றது
நீ அறிந்துகொள்வாய் பெண்ணே -
நான் உந்தன் காதல் மன்னன்
நீ என்னை ஆளும் காதல் மக ராணி
என்னை ஆளும் அழகு தேவதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-17, 7:53 pm)
Tanglish : kaadhal
பார்வை : 323

மேலே