அடியே கருவாச்சி

குளிச்சதுகப்புரமும்
நாலுக்கு நாப்பது முறை
முகம் கழுவி

' மாய்ஸ்ரைஸரும்
ப்ரைமரும்' ..

'கன்ஸீலரோட
ஃபவுன்டேசன்'..,

' ஐ ப்ரோ - ஐ லைனர்
மஸ்காரா '..

'லிப்ஸ்டிக் - ஹைலைட்டர்
ஐ ஸேடோ ' ..

அம்புட்டும் போட்டும்
ஏதோ குறையுதேனு
கோபத்தோட முகத்த
கழுவி வரும் போது
'அடியே கருவாச்சி ' -என
நீ சொல்லும் அந்த
ஒற்றை வார்த்தயில்
ஒப்பனையில்லா
ஒட்டுமொத்த அழகையும்
அப்பிக் கொள்கிறேன்..

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (3-Jun-17, 11:19 pm)
Tanglish : adiye karuvaachchi
பார்வை : 191

மேலே