நான் பொறுப்பல்ல

அலசி ஆராயும் அவன் பார்வை
மௌனம் பேசி கொள்ளும் அவன் உதடு
முத்தமிட திட்டம் தீட்டும் அவன் நாவு
என்னை குத்தி காயப்படுத்த பார்க்கும் அவன் தாடி

வெட்கத்தால் மையிட்ட என் கண்கள்
அவனை கட்டி அணைக்கப் பார்க்கும் என் கைகள்
அவனை சாய்த்துக்கொள்ள ஏங்கும் என் மார்பு
அவன்மேனி முழுதும் ஓவியம் தீட்ட துடிக்கும் என் நுனிமூக்கு

வேண்டாமடா!!
தெரிந்தே உன்னிடம் ஏமார்ந்து விடுவேன்
அருகில் வராதே!!
எனதருகில் வராதே!!!!

எழுதியவர் : மல்லி (4-Jun-17, 2:08 am)
சேர்த்தது : மல்லி
பார்வை : 216

மேலே