என் நிழலும் உன் நினைவும் 555

அழகே...
மூன்றாம் பிறையையும் முழு
அமாவாசையையும் நீ மறந்துவிட்டாய்...
உன் நினைவுகள்தான் முழுமதியாய்
எனக்கு சில இரவுகளில்...
மரணம்வரை என்னுடன்
நீ வருவேன் என்றாய்...
ஏனோ புயல்
திசைமாறி சென்றது...
உன் நினைவுகள் என்னில்
மறையும் நாளில் நான் எங்கோ...
உன் நினைவுகள் என்னை
தொடரும் மரணம்வரை...
என்னிடம் சொல்லாமலே என்னை
தொடர்கிறது என் நிழலும்...
நான் தனிமையில் என்றும்
இருக்க போவதில்லை...
உன் நினைவுகளும் என் நிழலும்
என்னுடன் இருக்கும்வரை.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
