காதலின் வலி

உனது பிரிவு எனக்கு
மரணவேதனை தரும்
என தெரிந்தும்
நீ என்னை விட்டு
விலக தயாராக இருந்தால்.....
உன் பிரிவின் வேதனை
மரணம் வரை
என்னை கொண்டு
சென்றாலும்.....
பிரிவின் துயரம் என்னை
வாட்டவில்லை என்பதை
போல் என்னாலும்
நடிக்க முடியும்.......