புரியவில்லை இன்னும்
பார்த்த முதல் பார்வையிலே
புரிந்தது எனது
தேடலின் அர்த்தம் நீயென ..
ஒரு விரல் கோர்த்து முன் நீ
நடக்கையில் புரிந்தது
நீ பிறந்தது ஏன் என ...
முதல் கட்டியணைப்பில்
உன் மூச்சின் முழு வேகம் புரிந்தது ...
எனக்காய் பிறந்த போதிலும்
எனக்கென்று பிரசவித்த போதிலும்
எந்தன் தாயென புரிந்தது ...
புரியாத உன் அழுகையில் புரியவே இல்லை
நான் கண்டது வெறும் கனவு என்றும்
நீ எனக்கு கிடைக்கவே போவதில்லை என்றும்
உன் கடைசி கட்டியணைப்பில் தெரிந்தது