காதல் என்பதாய் இருக்கும்
![](https://eluthu.com/images/loading.gif)
"என்னை மாற்றி விட்டாய் நீ ! "
நீ அனுப்பிய
ஒற்றை வரி குறுஞ்செய்தி !
கவிதையாய் உருவாக்க வேண்டும்
சொற்கள் தேடலில் ..என் இதயம் சொன்ன
வார்த்தைகளை கொண்டு உருவாக்க வேண்டும்
எனும் ஆவல் !
தலையணையோடு பேசிக்கொண்டு இருப்பாய் !
தனிமையை தேடிக்கொண்டே இருப்பாய் !
கனவுக்காய் உறங்குவாய் !
நினைவுக்காய் விழித்து இருப்பாய் !
நிமிடத்திற்கு ஒருமுறை அலைபேசி பார்ப்பாய் !
நித்தம் என் பார்வைக்காய் ஏங்குவாய் !
அறியாமல் வரும் கண்ணீர் துடைப்பாய் !
அன்பின் காதலன் வருகையை எதிர்பார்ப்பாய் !
புதிதான ஆடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவாய் !
காலை சூடிய பூ ..வாடலுக்குள் மாலையும் பூ சூடுவாய் !
கவிதைகளை மனப்பாடம் செய்வாய் !
காதல் மீது காதல் கொள்வாய் !
கெஞ்சல் வார்த்தைகளை எதிர்பார்ப்பாய் !
கொஞ்சல் வார்த்தைகளை எதிர்பார்ப்பாய் !
ஆணவத்தை அடியோடு மறந்து இருப்பாய் !
செல்லப்பெயர் ஒவ்வென்றையும் ரசித்து படிப்பாய் !
சிகை அலங்காரத்தை சித்திரம் போல சீவ முற்படுவாய் !
"வெட்கத்தை முதன் முதலாய் உணர்ந்து இருப்பாய் "
மாற்றிவிட்டாய் நீ !
என்பது நானாக இருக்க வாய்ப்பு இல்லையே !
அது "காதல் " என்பதாய் இருக்கும்