நட்பில் முளைத்த என் காதல்

நட்பின் முடிவில் வாழ்வின் தொடக்கம் என்று
காதலை தொடங்கினேன் ........

நட்பின் பார்வையில் எங்கே கண்டேன் என்று தெரியவில்லை காதலை ,,,

உரிமையாய் கை கோர்த்தபோதா
எதார்த்த பார்வைக்குள்
எதற்கோ திட்டிதீர்த்த வார்த்தைக்குள்
தெரியாமல் மோதிக்கொண்ட ஸ்பரிசத்தில்
வழிந்தோடிய கண்ணீரை ஒருவாறு கட்டிபோட்டதில்
தாகத்திலும் தள்ளி நின்ற விதம் - என

எதில் என்று தெரியவில்லை

சிக்கி தவிக்கிறேன் எதில் என்று தெரியாமலும்
காதலை சொல்லிவிட முடியாமலும் ......

கொஞ்சம் பிரித்து படித்து பார் ,,,,,,
இந்த கவிதையில் சொல்லிவிட்டேன் என் மனதை ஒருவாறு ........ உன்னிடம் ....

எழுதியவர் : வான்மதிகோபால் (5-Jun-17, 6:48 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 215

சிறந்த கவிதைகள்

மேலே