கொப்புளங்கள்

நிஜங்களை உமிழ்ந்து
கடந்து போன நொடிகள்

நித்திரைகளை சுமந்த
முக்திபெறாத யாத்திரைகள்

மிச்சமில்லாத பொழுதில்
எச்சமாய்ப்போன தேடல்கள்.....


பிக்காஸோவின் தூரிகையில்
இதுபோன்ற
தெவிட்டாத எதார்த்தங்கள்
என்னுடைய
எழுதுகோளின்
சீழ்பிடித்த கொப்புளங்கள் ...........

எழுதியவர் : சன்மது (8-Jun-17, 10:55 am)
சேர்த்தது : sanmadhu
Tanglish : koppulangal
பார்வை : 183

மேலே