பிளாஸ்டிக் அரிசி சொல்லும் பாடம்

பிளாஸ்டிக் முட்டை வரிசையில் பிளாஸ்டிக் அரிசி பற்றி பரவி வரும் செய்தி மக்களை அதிகமாக பீதி அடைய செய்துள்ளது.

வாட்ஸஅப்ப் வீடியோக்கள்:
பிளாஸ்டிக் முட்டை என்றார்கள் அன்று. இன்று பிளாஸ்டிக் சர்க்கரை பிளாஸ்டிக் அரிசி என்று சொல்கின்றனர்.பாசுமதி அரிசியில் பிளாஸ்டிக் அரிசி என்று வடஇந்தியர் ஒருவர் கூறி முதலில் சாதத்தை உருட்டி பந்தாக்கி துள்ள வைத்து காட்டிய வீடியோ ஓன்று இணையத்தில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியாணி அரிசி தானே எங்கேயோ அப்படி நடக்கிறதோ நடக்கவில்லையோ என்று அதிகம் யோசிக்காமல் அடுத்த வீடியோ பக்கம் சாதாரணமாக போய் விட்டனர் மக்கள்.

தமிழ் வீடியோவில் :
இப்போது அடுத்தததாக தமிழச்சி ஒருவர் அரிசியை உருட்டி அது பந்து போல துள்ளுவதாய் காட்டுகிறார் ஒரு வீடியோவில் . அதைப்பற்றி தெரியாமல் தன குழந்தைக்கு இரண்டு நாட்கள் ஊட்டியதாகவும் என்ன ஆக போகிறதோ தெரியவில்லை என்று அவர் கூறும் வீடியோ பார்க்கும் நபருக்கு படபடப்பு வந்து விடுகிறது. அந்த அரிசி உருண்டை துள்ளும் போது பார்ப்பவர்களின் இதயமும் ஒரு நிமிடம் துள்ளி விடுகிறது.

கலப்படம் இல்லை கல்லே உணவு:
அரிசியில் கல் கலந்து கலப்படம் செய்த காலம் மலை ஏறி போய் இப்போது கல்லே அரிசியாக மாறி போய் வருகிறது. பிளாஸ்டிக் அரிசிக்கும் நிஜ அரிசிக்கும் கண் பார்வைக்கு சத்தியமாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அரிசி அகோரிகள்:
எப்படி இவர்களால் இதை செய்ய முடிகிறது. இதை சாப்பிடும் மனித வயிறு என்ன ஆகுமோ என்ற கவலை இல்லாத கொடூர செயல் . இந்த ஏமாற்றுக்காரர்கள் வேலையை என்ன என்று சொல்ல.லாபத்துக்காக எதையும் செய்ய துணிந்து விட்ட மனித வெறியர்கள். மனிதன் மனிதனை தின்னும் அகோரிகளாய் மாறி விட்ட காலம் இது.

காக்கா உருண்டை:
சோறு வடித்து சாப்பிடு முன் முதல் உருண்டை பிடித்து நம் மூதாதையருக்கு படைப்பதாய் நினைத்து காக்கைக்கு வைப்பது நம் வழக்கம். இனி உருண்டை பிடித்து பந்து போல் துள்ள விட்டு சோதித்த பின்பே வாயில் போட வேண்டும் போல இருக்கிறது நிலைமை. காக்கைக்கும் சோதித்ததே இனி வையுங்கள் காக்கையை கொன்ற பாவம் நமக்கு வேண்டாம்.

சோதனைக்கு பின்னே சோறு வைப்போம்:
அரிசியை உலையில் போடு முன் கொஞ்சம் நீரில் மிதக்க விட்டு மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி என்றும் தண்ணீரில் மூழ்கினால் நல்ல அரிசி என்றும் இனி இன்றிலிருந்து சோதித்து பார்க்க தொடங்குவோம்.

சிந்திக்க தொடங்குவோம்:
விவசாயத்தையும் விவசாயியையும் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி விட்ட நாம் இனி பிளாஸ்டிக் அரிசிகளை நிஜ அரிசியாய் நினைத்து விழுங்க வேண்டிய காலம் வருமோ என்னவோ. சிந்திக்க தொடங்குவோம். நெல் விளையும் பூமியை வீடுகளாக்காமல் விளை நிலங்களாக இருக்க விடுவோம் .வீடுகளிலும் சிறு செடிகளும் மரங்களும் நட்டு மழை தாய் நம்மை தேடி வந்து நம் பூமியை மட்டுமல்ல நம் வயிற்றையும் காக்க வழி செய்வோம்.

பின் குறிப்பு:
இது தளத்தில் என் முதல் கட்டுரை என்பதால் வாசக நண்பர்களின் கருத்துக்களை ஆவலாய் எதிர்பார்க்கிறேன். உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் அது நல்லா இல்லை என்பதாக கூட இருக்கலாம். உங்கள் கருத்துக்கள் என் எழுத்தை வளர்க்கும்.
யாழினி..

எழுதியவர் : நாஞ்சில் யாழினி (11-Jun-17, 6:26 pm)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : pilaastic arisi
பார்வை : 251

மேலே