கோபம்

சினம் கொண்ட பார்வையில்
நாம் காணும் வேளையில் பாசமுள்ளப் பிள்ளைக்கும் பகைவனாகி போவோமே!

காதல் கொண்ட
பெண்ணிடம்
கடுமையாக பேசினால் கனிந்த காதலும் கசந்து போகுமே!

அர்த்தமான பேச்சையும் ஆவேசமாக பேசினால் அக்கறையும் மறைந்து போகுமே!

கோபம் அது வந்துவிட்டால் இயல்பான குணமும்
இல்லாமல் போகுமே!

கோபத்தினால் தவறுகளைத் தண்டிக்க முடியுமே தவிர அவைகளை திருத்திவிட முடியாது.

நமக்கும் பிறருக்கும் வேதனை தரும் கோபத்தைக் கைவிடுவோமா?

எழுதியவர் : கலா பாரதி (12-Jun-17, 11:57 am)
சேர்த்தது : கலா பாரதி
பார்வை : 61

மேலே