அவளை கைது செய்யுங்கள்
அவளின் ஒரே ஒரு புன்னகையில்
எத்தனை பேரரசுகள் வீழ்ந்திருக்கும்
அவளை கைது செய்யுங்கள்....!
இமைகளின் வழியினால் என்னுள் ஊடுருவி
என் மனதினை கொள்ளையடித்த திருடி
அவளை கைது செய்யுங்கள்..!
தன் வெகுளித்தனத்தால் என் எண்ணங்களுக்கு
இடையே போர் மூட்டி என் அமைதிக்கு பங்கம் விளைவித்தவள்
அவளை கைது செய்யுங்கள்..!
எரிமலையாய் தவித்த என் இதயத்தை
உரியவன் அனுமதி இன்றியே,அன்பால் அணைத்தாள்
அவளை கைது செய்யுங்கள்...!
அவ்வபோது என்னுள் எழும் ஏக்கங்களை
அண்ணார்ந்து பார்க்காமலேயே கொலைசெய்துவிட்டால்
அவளை கைது செய்யுங்கள்..!
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்து
சாதா மனுஷி என பொய்வேஷம் போடுகிறாள்
அவளை கைது செய்யுங்கள்..!
காதல் கடவுள்களே அவளை கைது செய்து
என் இதயமென்னும் தங்கக்கூண்டில் சிறைவையுங்கள்
காலமெல்லாம் என் வாழ்வை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்....!
கோவை.சரவண பிரகாஷ்.