காதல்

கண்களிரண்டும் களிநடனம் புரிந்து
வா வா என் மன்னவா என்று ஜாடைகாட்ட
கட்டிய கொலுசு குலுங்க கால்கள்
அலாரிப்பு ஆடி அசைந்து வந்திட
விரிந்து குவியும் கைகள் இரண்டும்
கதிரவனை பார்த்து அலரும் தாமரை ஒப்ப
கை கூப்பி வா வா அன்பே என்று
என்னை அருகே அழைப்பதை உணர்ந்தேன்
உள்ளமெல்லாம் இன்பம் நிறைத்திட
இன்ப வாகனத்தில் விண்ணில் பறந்தேன்
கண்ணே என்கண்மணியே காதலியே
இதோ பறந்து வந்துவிட்டேன்
உன்னை என் காதல் வாகனத்தில் ஏற்றி செல்வேன்
இந்திர லோகம் சென்று அமிர்தம் உண்டு வந்து
நம்முலகம் வந்தடைந்து
அமர காதலராய் காலத்தை வென்று வாழ்ந்திடுவோம்
அன்பும் பண்பும் பரிவும் ஆரணமாய் நம்மை காக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jun-17, 5:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 304

மேலே