காதலின் பல ரூபங்கள்

கொஞ்சும் இளமையில்
துள்ளி வரும் காதல்
மோகமும் காமமும்
பொங்கிவரும் உறவு
ஓடி விழும் நீர்வீழ்ச்சிபோல்

இளமைப்போய் முதுமை
அடிவைக்க. பொங்கிய மோகம் காமம்
தணிந்திடும் தன்னால் ,,
பிள்ளைகள் தந்த உறவால்;
அன்பின் பிணைப்பில்
இப்போது மலர்ந்திடும்
புதிய காதல்
ஜீவ நதியின் போக்கு போல்
அமைதி ததும்பும் காதல்

முதுமையில் காதலுறுவு
அன்பு பாசம் மட்டும் கலந்த
ஈருடல் ஓருயிர் இதுவோ
என்று காண்போர் மகிழ்ந்து
அதிசயிக்கும் உன்னத உறவு
இதற்கிணை தாய் சேய் உறவு !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jun-17, 4:09 pm)
பார்வை : 122

மேலே