விழியோடு மொழி கற்றுகொடடி 555

அழகே...
மழலையின் பாஷையையும்
சினுங்கல்களையும்...
தாய் எளிதாக
கற்றுக்கொள்வாள்...
நானும் முயற்சிக்கிறேன்
உன் விழிகளின் மொழியை...
என்னால் கற்றுக்கொள்ள
முடியவில்லையடி கண்ணே...
நீ மட்டும் எப்படி என் பார்வையை
வைத்தே எல்லாம் தெரிந்து கொள்கிறாய்...
நீயும் நாளை
தாய்மை என்பதாலா...
நான் உனக்கு முதல் குழந்தை
என்று சொன்னாயே இதுதானோ...
என்னுயிரே உன் மடியில்
நான் தலைசாய்த்து...
நீ தலைகோதும் நேரம் உன்
தாய்மையை உணர்கிறேனடி நான்...
உன் முதல் மழலைக்கு
ஒரு முத்தம் கொடடிஇப்போது.....