சிறகு விரிக்கும் மனது
பட்டுக் கூந்தல் பக்கம் தழுவ
வட்ட நிலவாய் வடிவம் தந்தாள்
சுட்டும் விழியால் சொற்கள் பிழிந்தாள்
கட்டிக் கரும்பாய் கண்ணில் இனித்தாள்
கட்டுக் குலையாத கந்தர்வ உடலால்
எட்டு வைத்து எழில்ராகம் இசைத்தாள்
தொட்டு விடவா தொடர்ந்து வரவாவென
சிட்டுக் குருவியாய் சிறகடித்தது மனது
ஆக்கம்
அஷ்ரப் அலி