ஆயிரத்தில் ஒருத்தி -- புதுக்கவிதை
ஆயிரத்தில் ஒருத்தி -- புதுக்கவிதை
ஆயிரத்தில் ஒருத்தியடி நீ எனக்கு !
நினைவெல்லாம் நீ தானே !
எங்கே தான் போனாயோ சொல்லாமலே !
நீயின்றி நானும் இல்லாமலே !
என்னதான் செய்வதோ புரியவில்லை !
இப்போதெல்லாம் நீ பேசாமல்
விட்டுவிட்டால் என்னை விடக்
கவலைப் படுகிறது நீ
வாங்கித் தந்த கைபேசி !!!
உன் நினைவலைகளில் நான்
என்னைத் தொலைத்தேன் !
கொல்லாமல் கொல்லுகின்றாய் என் தேவி !!
காற்றும் பூவும் உன்னைப் போல இருக்க ...
தினம் என்னை நானே வெறுக்க ...
ஏனோ முடியவில்லை உன்னை மறக்க !!
உறங்க நினைக்கிறேன் ! உறங்க முடியவில்லை .
இமைகள் மூடியும் நீ கனவுகளில்
நிழலாகித் தீண்டுகின்றாய் ! வருகின்றாய்
என்னருகில் தேவதையே !
அறிவாயோ என் நிலையை !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்