விழிப்புணர்வு புதுக்கவிதை

புத்தகம் ஏந்த வேண்டிய கையில் ---- கவிதை

புத்தகம் ஏந்த வேண்டிய கையில்
புன்னைகை சிந்த வேண்டிய முகத்தில்
சித்திரம் வரைய வேண்டிய தூரிகை எங்கே ?
செங்கலைச் சுமக்கும் சோகம்தான் ஏனோ !!!


முள்ளுக் காட்டில் முற்றிலுமாய்த் துளிர்கள்
கள்ளிச் செடியாய்க் கருகும் நிலைதான் ஏனோ !!!
குழந்தைகளா ! கூலிகளா ! சிந்திப்பீர் மானிடரே !
பச்சைக் குழந்தைகள் கைதனிலே எச்சில் தட்டுகள் !!


தீப்பெட்டி ஆலையில் தீயினில் மடிந்திடும்
நச்சுப் புகைதனில் நலன்கெட்டு போகும் துயரம் !
பிஞ்சுக் குழந்தைகள் ! இரக்கமில்லாச் சமுதாயம் !
தஞ்சம் தருவாரின்றித் தவித்திடும் நிலையும் ஏனோ !!!


பெற்றக் குழந்தைகைளைக் காசிற்கு விற்கும்
பெற்றவர் திருந்திடல் வேண்டும் - உடன்
பள்ளிக்கு அனுப்பிடல் வேண்டும் . குழந்களுக்கு
நல்லதோர் வல்லதோர் கல்வி வேண்டும் !!!


ஆலையின் நிர்வாகம் அள்ளித்தரும் அந்தக்
கூலிதான் குழந்தைக்கு ஈடாகுமா ??
சாலைதோறும் இன்று பள்ளியுண்டு - அங்கு
சத்தியம் குழந்தைகளைச் சேர்ந்திடுவீர் !!!!


ஆக்கம் :- கவிச்சிற்பி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Jun-17, 5:53 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 298

மேலே