உழவனே
உழவனே நீ கலங்காதே
ஏர் பிடித்த உன்னை
ஏறி அறைந்த அரசனுக்குத்தான்
அவமானம்..
இயேசுவின் சிலுவையை
மக்கள் நெஞ்சில் சுமப்பது போல
ஏர் சின்னம்
நெஞ்சில் சுமக்கும் காலம்
வெகு தொலைவில்லை..
உழவனே உன் உழைப்பில் உணவு
அருந்தியவன்
உனக்கு அளித்த பரிசு இது!!
மண்ணை பிளந்து
உணவு வாசனை தந்தாய்
உன்னை பிளக்க நினைக்கும்
அரசனையும் மன்னித்துவிடு
உன் வலி தீரும்
உன் வாழ்வு உயரும்..
உழைத்த கலப்பை மேல்
நீ உயிர் விட வேண்டாம்
என் நெஞ்சம் வெடிக்கிறது
நாம் போராட திரண்டால் தங்காது பூமி
மண்ணை மதிப்பவன் நீ
உன்னை மதிக்க வருவார்கள்
அனைவரும் ஒருநாள்
மூன்றாம் நாள் விழித்தெழுந்த
கடவுள் ஆவாய்..