வாழ்வின் நிதர்சனம்
நிரந்தர பிரிவிற்கான ஒத்திகையை அரங்கேற்றிப் பார்க்கும் வாய்ப்பை அடிக்கடி தந்து ஞானமாகிறது காலம்...
நிரந்தரமான உறவென எவருமில்லையென்ற வேதாந்தமுணர, மனம் பகிர மாந்தர்களில்லா தனிமைச் சிறையில் சிக்கியவனாய் காற்றை சுவாசிப்பதால் உயிர் வாழ்கிறேனென்றே உணர்கிறேன் எனக்காகத் துடிக்கும் இதயத்துடிப்பாய்...
புழுவாய் துடிக்கிறேன்,
என்னருகில் இருந்து உதவிய இதயங்களுக்கு என்னால் உதவ முடியவில்லையென்பதை எண்ணி...
எதற்காகவும் கலங்காத நான் இன்று
கண்ணீர் விட்டழுகிறேன் அன்பானவர்களெல்லாம் என் மீது வெறுப்பு கொண்டு பிரிவதையெண்ணி...
தகவல் பரிமாற்றத் தொழிற்நுட்பங்கள் வளர்ச்சி பெற்றிருந்தாலும், அன்பானவர்கள் அருகிலே இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை...
என்ன குற்றமிழைத்தேனோ?
எதிர்பார்ப்பில்லாமல் அன்பு கொண்டது தான் தவறோ?
பூக்கள் பூப்பதும், உதிர்வதும் போலே, அன்பானவர்கள் வருவதும் போவதும் தொடர, வண்ணமில்லா பூச்சியைப் போலே அன்பைப் பெறமுடியாத அனாதையாய் வருந்துகிறேன் என் நெஞ்சே...
நிரந்தரமான ஒன்றையே நாடி இறைவனிடமே மனதை அர்ப்பணிக்கிறேன் என்று நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறேன் சந்நியாசமென்ற சூரியனை நோக்கி.....