சிகைச்சாலை

தலைக்கு அழகு சேர்க்கும்
சிகையலங்கார கலை
வணங்காமுடியையும்
வணங்கவைக்கும்
உன்னத நிலை...

நம்பிக்கையின்
வாசனை அறியாதவனும்
நம்பிக்கையே
இல்லாதவனும்
நம்பி கழுத்தை நீட்டும் கலை...

உங்களின் கையும்
கத்திரிகோலும் செய்யும்
ஆலாபனைக்கு முடிகள்
எல்லாம் எப்படி பணிந்து
போகிறது தெரியுமா...?

உங்களின் சிகை சாலைக்கு
உள்ளே போகும்போது கிழவன்
வெளியில் வரும்போது குமரன்...

நீங்கள் என்ன வயதை
குறைக்க வந்த வைத்தியர்களா..?
உங்களின் கையும்
மையும் பட்டதும் முதுமையும்
இளமை உஞ்சலாடுகிறதே...

நீங்களே இல்லை என்றால்
மனிதன் நாட்டில் வசிக்கும்
காட்டுவாசியாகிடுவான்...
உங்களின் சேவைக்கு
என்றென்றும் தவறாமல்
தலை வணங்குவேன் நான்...

சமரசத்தையும்
சமத்துவத்தையும் கலந்து
தீண்டாமை எனும் பேயை
ஓட்டும் சமூக சிகைதிருத்தவாதிகள் நீங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (13-Jun-17, 12:07 pm)
பார்வை : 132

மேலே