கண்ணீர் கதை
தரையினிலும் கண்ணீரே ! தண்ணீரிலும் கண்ணீரே !
கரையினிலும் துன்பங்கள் காலமதின் துயரங்கள் !
உரைக்கின்ற என்கருத்து உயிர்பெறுமா உலகீரே !
திரைக்குப்பின் பார்த்தாலே திக்கெல்லாம் ஓலங்கள் !!
உற்றார்கள் இல்லையினி உறவாடும் கடலன்னை .
மற்றைவழிச் செல்வதனால் மாறுகின்ற பருவநிலை !
பெற்றிட்டோம் கடல்நீரை பெருகிவரும் மணல்மேடு .
இற்றைநாள் மீன்களுமே இருப்பதற்கோர் இடமில்லை !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( திடீர் கவிதை --- நி . மு . 323 )