அத்தருக்காக அல்ல


சோகத்தின் சுமை சுமந்து
சுரங்கள் வழி நடந்த பாதையை
ராகங்கள் என்று அழைத்தனர்
மனிதர்கள் ராகங்கள் என்று அழைத்தனர்

ரோஜாக்களின் இதழ்களை கசக்கி
வடித்தெடுத்த ரதத்தை
அத்தர் என்று அழைத்தனர்
மனிதர்கள் அத்தர் என்று அழைத்தனர்

சோகங்கள் ராகங்களுக்கு சொந்தமாகலாம்
ரோஜாவுக்கு ஏன் ?
ஆண்டவன் படைத்த அழகிய ரோஜா
அத்தருக்காக அல்ல
மனிதர்களே அத்தருக்காக அல்ல !

---கவின் சாரலன்


எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-11, 5:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 319

மேலே