சாமானியன்

அண்டம் அழகிழக்கிறது ஆண்டவனின் அர்த்தமற்ற படைப்புகளால்;
உலை கொதிப்பது கனவாகிறது சில களைச் செடிகளின் இடைமறைப்பால்;
ஒரு வாய் சோற்றுக்கு ஊசலாடும் உயிர்களும் பல உண்டு;
ஈசலைப் போல் ஒரு தினத்தில் முடித்துக் உயிர்களும் ஏராளம் இங்கே;
பட்டினியில் வாழும் அவர்களுக்கு பட்டுத் துணி ஏது?
சாக்கினை போர்த்திக் கொள்ளும் ஜனங்களுக்கு மத்தியில் தான் சாக்கடைகளும் ஓடுகின்றன;
செருக்கும் சில சில்லறைகளால் செருப்பற்றவர்களின் வாழ்வு சிதைக்கப் படுகிறது;
சமூகத்தால் புதைக்கப் படுகிறது சாமானியனின் கனவு;
நவீன நாகரிகத்தின் மத்தியில் நாசமாகிறான் அவன்;
அறிவற்ற சிலரால் அடையாளம் தொலைக்கிறான் அகதியைப் போல;
எடுக்கும் பிச்சைக்கு ஏராளம் வரிகள்;
அதிலும் கூட பங்கு உண்டு என் அரசாங்கத்திற்கு;
நான் இந்நாட்டவன் என நினைவில் கொள்வதற்காக.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (15-Jun-17, 5:04 pm)
பார்வை : 127

மேலே