கனாக்காலம்-குயிலி

கனாக்காலம் -குயிலி

தொடுவானத்தின் எல்லை
விரல்களான போதிலும்
பெரும்பாலான வெற்றிடத்தை
காற்றே நிரப்புகிறது..!

உடைகள் அவிழ்த்து
குடைபிடித்த காலங்கள்
புதுசாயம் பூசி
பல்லிழிக்கிறது...!

பால்வீதியில்
நடந்த பாதங்கள்
பாலியலில்
இளைப்பாறுகிறது...!

நாகரிக நட்பு
என் தோழிக்கு
பெண் தோழி
எனும் பட்டம்
அளித்திருக்கிறது....!

வலை விரிக்கும்
வேடனென
உருமாறிப்போன
நண்பன் கதை
சொல்ல ஊருக்கெல்லாம்
வாய் முளைக்கிறது...!

எப்படி சொல்வேன்
நரை விழும்
இந்நாளிலும்
அவன் என்
நண்பனென்று ...!

எழுதியவர் : குயிலி (16-Jun-17, 12:21 am)
சேர்த்தது : குயிலி
பார்வை : 110

மேலே