என் உயிர் தோழிக்கு சமர்ப்பணம்

தோழி ஒருவரின் விருப்பத்திற்கு இணங்க படைத்த கவிதை
உங்கள் விழிகள் முன்பு...!!!

நின் முகம் காண

வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண

வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில் என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில் ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண

நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல சீண்டல்கள் செய்தேன்
செங்குழல் மூங்கில் தேடி ரீங்காரமிட்டு வரும் வண்டு போல

நின் முகம் காண

வாழும் நாள் சிறந்திட வானவர்கள் மலர் பொழிந்து வாழ்த்திட
தோரணங்கள் சூழ்ந்திட வீட்டு முற்றத்தில்
சொந்தங்கள் அமர்ந்திட இவளுக்கு இவன் இவனுக்கு இவளென்று
தாம்பூலம் மாற்றிட மணப்பெண்ணாய் மலர்களின் மகளாய்
அழைத்து வந்த தோழிகளின் கை உதறி
கண்ணாளன் அவனெங்கே என்று பார்த்தவள்
கண்டதோ பிரிதொரு முகம் !!!!

கனவு தான் காண்கிறேனோ??

உயிரை விட உயர்வாய் நினைத்தேன்,,
உடையை போல் கழற்றி ஏறிந்துவிட்டாய்,,

கனவு தான் காண்கிறேனோ..??

கண்ணீர் வரவில்லையே கனவிலும் நினைக்கவில்லையே,,
கண்ணாடியாய் இதயம் உடைந்ததே.......
இரவுக்காக பழகவில்லை,,. உடலுக்காகவும் பழகவில்லை...!!
இறக்கும் வரை பயணிக்க நினைத்தேன்,,
இதயம் பிளந்து வெளியே வந்து உயிருடன் புதைத்துவிட்டாய் பெண்ணே!!!

கனவு தான் காண்கிறேனோ???

நான் நானாகவே இருப்பதில் தானோ ஏனோ ??
அளவற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன் .....

ஒருசிலரைப்போல் பொய்யான அன்புடன் பழகினால்
மகிழ்ச்சியாக வாழமுடியுமா என்னவோ ?? - அறியவில்லை ......

ஏமாற்றங்களை சந்திக்கும் தருணங்களில் தான்
மனம் மரணத்தை தேடுகிறது என்பார்கள் - எனக்கோ
மீண்டும் வாழ ஏங்குகிறது - இது ஆசையா ?? நம்பிக்கையா ??? - புரியவில்லை

அவளது பிரிவு எனக்கு மரண வேதனை தரும் என தெரிந்தும்
அவள் என்னை விட்டு விலக தயாரானாள் !! விலகிவிட்டாள்!!!
அவளது பிரிவின் வேதனை மரணம் வரை என்னை கொண்டு சென்றாலும்.....

பிரிவின் துயரம் என்னை வாட்டவில்லை ஒருநாளும் - என்று
நடிக்க முடியும் என்னால் எந்நாளும்....!!!

அன்பு தோழன் சாய் கார்த்திகேயன் ராமமூர்த்தி

எழுதியவர் : சாய் கார்த்திகேயன் ராமமூ (15-Jun-17, 7:13 pm)
பார்வை : 429

மேலே