தயிருக்கும் அமுதென்று பேர்
ஈன்ற தாய் ஊட்டியது பால்சோறு
என்றால்
இயற்கை வரமளித்தது
தயிர்சோறு..
காட்சிநிறம் வெண்மை வெளிர் மஞ்சள் கலப்பு
காட்டும் சுவை கொஞ்சம் புளிப்பு
சேர்த்துக்கொள்க உவர்ப்பு
அதற்குப் போதும் சிறிதளவு உப்பு
சுடுசோறோ.. பழையசோறோ..
தயிரின் இலக்கணம்
தமிழின் இலக்கணம் போன்று..
ஒரு போதும்
தனித்தன்மை இழக்காது..
தொட்டுக்கொள்ள ஊறுகாய்..
கடிக்க இருக்கு வெங்காயம், பச்சை மிளகாய்..
சுள்ளென்று இருக்கும் சுட்ட கருவாடும்..
சுடாத பழைய மீன்குழம்பும்..
சொல்லுமே புதிய இன்பம்..
இது போதுமடி எனக்கு
ஆகா!!..என்னவோர் ஆனந்தம்!
கற்பனையிலேயே..