தந்தைக்கீடாக தரணியிலே யாருமுண்டோ
தன் நலம் கருதவில்லை தனக்கெதுவும் வைக்கவில்லை
பொன் பொருள் யாவுமே தன் பிள்ளை எனக்கொண்டார்
மழை வந்தால் தான் நனைந்து மகன் தலைக்குக் குடையாவார்
பிழை வந்தால் பிரம்பெடுப்பார் பின் பிரியமுடன் எனை அணைப்பார்
களைப்பு வந்தாலும் இளைப்பாற அவர் எண்ணவில்லை
உழைப்பு உழைப்பு என ஓடாக அவர் தேய்ந்தார்
பிழைப்பு யாவுமே தன் பிள்ளை எனக்கீந்தார்
ஒரே சட்டை தனையணிந்து ஓராண்டு அவர் வாழ்வார்
விதம் விதமாய் ஆடையிட்டு விருப்போடு எனை முகர்வார்
தங்கம் பொருள் யாவும் இன்று இருந்தும் என்ன பயன்
அங்கம் செழிக்க அரும் பாடு பட்ட என் அப்பன் எனக்கில்லையே
தந்தை நலன் காப்போம் தந்தைக்கீடாக தரணியிலே யாருமுண்டோ
ஆக்கம்
அஷ்ரப் அலி