கேள்விக்குறியாய்
புதிரான
படைப்பு
புரியாத
தவிப்பு
படைத்தவன்
படைத்து
விட்டான்
பசித்தவனுக்கு
உணவாய்
"என்னை"
பசித்தவனோ
புசித்தான்
அவன்
பசிக்கு
"என்னை"
புசித்த
பின்
மிச்சத்தை
எச்சமாய்
தெருவோரம்
வீச
தெருவோர
நாய்களோ
நுகர
தயாராய்
எனை சுற்றி
படைத்தவன்
வருவானோ
எனை காக்க?
கேள்விக்
குறியாய்
குருகி
நிற்கிறேன்
விடை
தெரியாது
#sof_sekar