தந்தையர் தினம் என் அப்பா வைபெரியசாமி 555

அன்புள்ள அப்பா...

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நீங்கள் உழைக்காமல் ஒருநாளும் இருந்ததில்லை.காடுகளில் வேலை இல்லையென்றாலும் நம் வெட்டு தோட்டத்தில் அன்று ஏதேனும் ஒரு வேலை செய்வீர்கள்.உங்களை அம்மா ஒருநாளாவது ஓய்வு எடுங்கள் என்று சொன்னால் கூட அப்போதும் ஏதேனும் செய்வீர்கள்.நீங்கள் ஓய்வெடுத்து உறங்கி நான் கண்டதில்லை என் தந்தையே.

ஆசையாக நாங்கள் ஏதேனும் கேட்டால் அன்று உங்கள் சமையல்தான் வீட்டில்.அதனால்தான் என்னவோ இன்று நானும் நன்றாக சமைக்கிறேன் அப்பா.எவ்வளவு வேலையாக இருந்தாலும் வீட்டிற்கு வந்ததும் தம்பிங்க சாப்டங்களா என்று கேட்டு தான் வீட்டுக்குள்ளே வருவீர்கள்.உங்களுக்கு முன்பாக சாப்பிட்டு இருந்தாலும் உங்கள் கையால் எல்லோருக்கும் ஒரு உருண்டை சாதம் கொடுத்துவிட்டுதான் நீங்கள் உன்ன ஆரமிப்பீர்கள் அப்பா.

சிறுவயதில் உங்கள் தொழில் நான் அமர்ந்திருக்கும் போதெல்லாம் நான் எதோ மலை உச்சியில் விண்ணை தொடும் தூரம் வளர்ந்துவிட்டோம் என்று சந்தோசம் கொண்டேன்.என் நண்பர்களிடம் சொல்லி சந்தோசம் கொண்டு இருக்கிறேன்.இன்று நானும் ஒருநாள் மலை உச்சியில் ஏறி நின்று பார்த்தேன் ஒரு பள்ளத்தாக்கினை.எனக்கு சந்தோசம் கிடைக்கவில்லை.உங்கள் தோள்மீது இருந்த சந்தோசம் நிச்சயம் இல்லை அப்பா.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது நீங்கள் புகைபிடிப்பீர்களாம் அம்மா சொல்லி இருக்கிறார்கள்.நாங்கள் வளர அரமித்ததும் நீங்கள் நிறுத்திவிட்டீர்களாம்.நீங்கள் புகைபிடித்து நானும் அண்ணன்களும் இதுவரை கண்டதில்லை அப்பா.இன்றுவரை எங்களுக்கும் புகைபிடிக்கும் பழக்கமும் இல்லை அப்பா.நான் பள்ளி செல்லுமுன்னே எனக்கு தமிழ் எழுத்துக்களை சொல்லி கொடுத்தீர்கள்.கடிகாரத்தில் நேரம் பார்க்கவும் சொல்லி கொடுத்தீர்கள்.என் காய் கடிகாரத்தில் நேரம் பார்க்கும் போதெல்லாம் பல நேரங்கள் உங்கள் முகம் வரும் அப்பா.

அப்பா இதுவரை எங்களை நீங்கள் ""டா"" என்று சொல்லி அழைத்ததில்லை.வாப்பா போப்பா என்றுதான் சிறுவயது முதலே.நான் கோழி விளையாடும் போது என்னுடையதை எடுத்து சென்றவனை நான் அடித்தேன்.தவறு என்னுடையதல்ல.இருந்தும் அன்றுதான் என்னை முதன் முதலில் நீங்கள் அடித்தீர்கள்.நான் உங்களிடம் அடி வாங்கியது முதலும் கடைசியும் அதுதான் அப்பா."இன்று என்மீது தவறில்லாமல் என்மீது யாரேனும் குறை சொன்னால் நான் அவரிடம் வாதாடுவதில்லை.சிறிது நேரத்தில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கையில்."அப்போது அங்கு இருப்பவர்கள் சொல்வார்கள் பெரியசாமி மகன் பொறுமைசாலி பெரியசாமி போலவே என்று.அப்போதெல்லாம் உள்ளுக்குள் அவ்வளவு ஆனந்தம் அப்பா எனக்கு.

நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்த வாழ்ககை பாடங்கள் எத்தனையோ.காட்டில் வேலை பார்க்கும் போது நீங்கள் மாற நிழலில் எங்களை அமர சொல்வீர்கள்.அம்மா அழைத்தாலும் அம்மாவிடம் கோபம்கொள்வீர்கள்.உங்களை அமரவைத்துவிட்டு நான் செய்யும் போது எனக்கும் வரும் இனபம் கோடி கோடி அப்பா.

இன்று உங்கள் மகன்கள் நாங்கள் சம்பாதித்தும் இப்போதாவது ஓய்வு எடுக்க சொன்னால் ஒருநாள் சும்மா இருந்தாலும் உடம்புவலி வருமென்று சொல்கிறீர்கள்.இதுவரை எங்களுக்கு நீங்கள் கடன் வாங்கி வைக்கவில்லை அப்பா.யாரிடமும் நீங்கள் கைநீட்டி கடன் வாங்காமல் எங்களையும் ஊரார் மதிக்கின்ற அளவுக்கு வளர்த்துவிட்டீர்கள்.உங்கள் மாகாண என்று சொன்னால் அனைத்து சாதியினரும் உங்களுக்கென்று தனி மரியாதை வைத்திருக்கிறார்கள் அப்பா.உங்கள் மகன் என்று சொன்னால் எங்களுக்கு கிடைக்கிற மரியாதையும் தனிதான் அப்பா.

நாளை என் மகன்கூட என் பெயரை சொல்வதைவிட உங்கள் பேரன் என்று சொல்லவே ஆசையப்பா.பெரிதாக சொத்துக்கள் இல்லை என்றாலும் தாத்தா உங்களுக்கு விட்டு சென்றதைவிட எங்களுக்கு நீங்கள் அதிகமாகவே கொடுத்துவிட்டீர்கள் அப்பா.நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் யாருக்கு கிடைத்ததோ இல்லையோ எங்களுக்கு கிடைத்தது அப்பா உங்களால்.

உங்களை பற்றி எவ்வளவோ எழுதலாம் அப்பா இன்னும் எங்களுக்காக நீங்கள் கஷ்ட்டபட்டதெல்லாம் நினைக்கையில் கண்ணீர்தான் வருகிறது அப்பா.

***அன்புள்ள என் அப்பா***

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Jun-17, 7:48 pm)
பார்வை : 165

சிறந்த கட்டுரைகள்

மேலே