கண்ணாடி முன்
தலைநகரில் இயங்கும் அந்த ஆறு மாடி கட்டிடத்தில் சுறு சுறுப்பாக இயங்கும் ஒரு பல்நாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித். இளமை வயதிலே ஒரு மிகப் பெரிய பதவியை வகிக்கும் பெருமை ரஞ்சிதுக்கே சேரும். நடையில் ஒரு கம்பீரம், முகத்தில் என்றும் புன்னகை, உடலில் ஆளை ஈர்க்கும் நறுமணம். அவன் இந்நிலையை அடைய பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். நிர்வாகத்தின் வேலை பர பரப்பில் அவனுக்கு அவன் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வருவதில்லை. அவ்வப்போது தனிமையில் இருந்தால் அவனுக்கு அவன் பட்ட கஷ்டங்கள் அந்த கருப்பு தினங்கள் மெல்ல எட்டி பார்க்கும் அவன் மனதில், அப்போது அவன் கண்கள் குளமாகும் மனம் கடந்து பதறும். அடிமேல் அடி வைத்தாள் அம்மியும் நகரும். எங்கும் தோல்வி, எதிலும் தோல்வி அவன் அனுபவிக்காத சிரமங்களே இல்லை. அவன் கண்டிடாத அவமானங்களே இல்லை. ஒரு கால கட்டத்தில் பிறகு வாழ்வே வேண்டாம் என்று தற்கொலைக்கும் முயற்சி செய்தவன். இன்று அவனை பெருமை பேசாத வாயும் இல்லை, தெரியாத ஆட்களும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆடம்பரம் மிகுந்த ஒரு வாழ்வை மிக சிறிய வயதிலே வென்றடைந்தவன்.
அன்று நாளிதழ் மற்றும் தொலைகாட்சி செய்தி நிறுவனங்கள் சாதனை மனிதருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சிக்காக ரஞ்சித்தை பேட்டி எடுத்து கொண்டிருந்தனர். மிகவும் பொறுமையாகவும் நகைச்சுவை உணர்வுடனும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்தான் ரஞ்சித். அந்த நேரம் அவனின் அலைபேசி ஒலித்தது, சற்று நேரம் என்று கூறி அலைபேசியை எடுத்தான்.
எதிர்முனையில் ரஞ்சித்தின் அம்மா, “ரஞ்சித் நானும் உன் அப்பாவும் உன் அத்தை வீட்டுக்கு போய் விட்டு வருகிறோம். நாங்கள் திரும்ப சற்று தாமதம் ஆகும் ரஞ்சித். வீட்டு சாவியை காலணி அலமாரியில் வைத்து விட்டு செல்கிறோம்” என்றார் அம்மா.
“என்னம்மா இதுக்காகவா எனக்கு அலைபேசியில் அழைத்தீர்கள். வாட்ச்மேனிடம் சொன்னால் அவன் பார்த்து கொலள்வனே அம்மா” என்றான் ரஞ்சித்.
“வாட்ச்மேன் அவன் மனைவிக்கு உடல் சரியில்லை என்று இன்றுதான் மூன்று நாள் விடுமுறை கேட்டு ஊருக்கு போயிருக்கான்” என்றாள் அம்மா.
“சரி அம்மா, பார்த்து பத்திரமா பொய் வாருங்கள்” என்று ரஞ்சித் அலைபேசி தொடர்பாய் துண்டித்து விட்டு பீடியை தொடர்ந்தான்.
ரஞ்சித் இரவில்தான் வீடு திரும்பிய் இருந்தான். வீட்டு வாட்ச்மேனும் இல்லை தனிமைதான் இன்று சலித்து கொண்டு குளியலை போட்டு விட்டு வந்தமர்ந்தான். வீட்டின் அமைதியான சூழல் அவனி பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது. ஆம், எப்பொழுதும் ஆரவாரமான சுழலில் இருக்கும் ரஞ்சித்துக்கு தனிமை வாட்டியது. ஆம், திவ்யா, அவளின் சிரிப்பு, அவளின் இனிமையான குரல், என்றும் ஓஊண்ணாஆஈ சிந்தும் அவள் முகம் எல்லாம் சேர்ந்து அவனை கண்களை குளமாக்கியது. அவன் முகம்தான் புன்னகை சிந்துமே தவிரே அவன் மனம் கலங்குவது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
பத்து வருடத்திற்கு முன்னாள் திவ்யா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நட்பு நாளடைவில் அவனுள் காதலாக மாறியது. திவ்யாவை ஒருதலையாக காதலித்தான் ரஞ்சித். ரஞ்சித்துக்கு மிகவும் இளகிய மனம். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் நடந்து கொள்வதே அவனின் சுபாவம். யாருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணமே அவன் மனதில் ஒருபோதும் தோன்றியது கிடையாது. அதனால் என்னவோ அவனை சுற்றியுள்ளவர்கள் அவனை பல வழிகளில் அவன் மனதை நோகடித்து விடுவர். ஆதலால் பலருக்கு இவனை கண்டால் ஏளனமாகத்தான் தெரியும். அவற்றை எல்லாம் ரஞ்சித் ஒரு பெரிய போருட்டாகவே எண்ணவே இல்லை. ஆனால், யாரை உயிரென நம்பிய் இருந்தானோ, யாரை தன் வாழ்க்கை என நம்பி இருந்தானோ, அவளே அவனை தூக்கி எரிந்தபின் உயிரோடு இருப்பதற்கு தகுதி இல்லை என எண்ணினான். ஆம், அவனுள் பூத்த காதலை அவளிடம் சொல்ல பயந்தான், ஆனால் நட்புடன் பழகினான். அவளுக்காக என்ன வேண்டுமானாலும் அவள் கேட்கும் முன்னமே செய்து கொடுத்து விடுவான்.
திவ்யாவுக்கு ரஞ்சித் தன்னை ஒரு தலையாக காதலிப்பது அரசல் புரசலாக தெரிந்தாலும் அதை அவள் பெரிது படுத்தாமல் அவனின் நல்ல குணத்தை உபயோக படுத்தி கொண்டாள் திவ்யா. தேவைப்படும் போது பண உதவியும் கீட்டு பெற்று கொண்டால் திவ்யா. ஒரு சில வருடங்கள் ரஞ்சித்தின் காதல் இப்படியே எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இப்படியே தான் போய் கொண்டிருந்தது. ரஞ்சித்தும் இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என்றெண்ணி இன்று காதலின் மௌனத்தை போட்டு உடைத்தான்.
இதை ஏற்கனவே எதிர்பார்த்த திவ்யா, “ரஞ்சித் நான் உன்னிடம் ஒரு பிரெண்ட் டாகத்தான் பழகினேன், அதுவும் இல்லாமல் நான் சரவணனை காதலிக்கிறேன்” என்றாள் திவ்யா.
அந்த சரவணன் வேறு யாரும் இல்லை, ரஞ்சித்தின் நெருங்கிய நண்பன். “அவன் கூட இந்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லையே” என்றான் ரஞ்சித்.
“ரஞ்சித் இது உனக்கு தேவை இல்லாத விஷயம். எனக்கு உன்னை பார்த்தாலே காதல் வரலே, நீயாகத்தான் நாக்கை தொங்க போட்டு கொண்டு என் பின்னால் சுற்றினாய், அதை நான் பயன் படுத்தி கொண்டேன்” என்றாள் திவ்யா.
கனவில் கூட யாருக்கும் துரோகம் நினைக்காத ரஞ்சித்துக்கு நண்பபும் காதலியும் சேர்ந்து அவனுக்கு இழைத்த துரோகம் ரஞ்சித்தால் தாங்க முடியவில்லை. இதன் பிறகு யாருக்காக வாழ வேண்டும் என்று தற்கொலை முயற்சிக்காக மலை உச்சியை தேடி போகும் தருவாயில் எதார்த்தமாக நாளிதழில் கண்ட வாசகத்தின் மேல் அவன் கண் நோட்டமிட்டது.
“யாருக்காகவும் நீ வாழவில்லை, உனக்காக மட்டும் தான் நீ வாழ்கிறாய், உன்னை தூக்கி எறிந்தவர்கள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும், அவர்கள் எட்டி பிடிக்காத இடத்தில் அவர்கள் நெருங்க முடியாத இடத்தில் அவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத இடத்தில் நீ உயர வேண்டும். அவர்கள் விழி பிதுங்க வேண்டும். அவர்கள் உன்னை கண்டு மிரள வேண்டும், பிரமிக்க வேண்டும்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அதை கண்டதும் அவன் மனம் சற்று அமைதி அடைந்தது. “நான் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்” என்று எழுந்தான் பொங்கி, கடின உழைப்பாலும் விவேகத்தாலும் பத்து வருட காலத்தில் தலை நகரே அண்ணாந்து பார்க்கும் தலைமை நிர்வாகியாக இன்று உருவெடுத்திருக்கிறான் ரஞ்சித். எத்தனை வருடம் ஆனாலும் நெஞ்சை விட்டு நீங்காது இந்த வலி. ஆனால் மறுபக்கம் இப்படியொரு அசம்பாவிதம் அவன் வாழ்வில் நிகழாமல் இருந்திருந்தால் இந்தளவுக்கு வாழ்வில் முன்னேறி இருக்க முடியாது.
வாசலில் கால்லிங் பெல் ஒலித்தது. சுய நினைவுக்கு வந்தவனாய் கண்களை துடைத்து கொண்டு கதவை திறந்தான். அம்மாவும் அப்பாவும் திரும்பிய் வந்து விட்டனர். அவர்களை உள்ளே அழைத்தான்.
“ரஞ்சித் நீ இன்னும் துங்கவில்லையா” என்றார் அப்பா. சற்று நேரத்தில் இருவரும் உறங்க சென்று விட்டனர். வழக்கத்துக்கு மாறாக அவர்களின் செயல் இருந்தது. எப்பொழுதும் வள வள என்று பேசும் அப்பா அளவோடு பேசியது, ரஞ்சித்தின் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.
மறுநாள் காலையில் ரஞ்சித் வேலைக்கு செல்வதற்காக அவனுடைய கார் இருக்கும் இடத்திற்கு வந்தான். அச்சமயம் தான் உணர்ந்தான், அப்பா நேற்று சென்ற கார் அங்கே இல்லை.
“அம்மா... அம்மா”... அழைத்தான் ரஞ்சித்.
என்னவென்று கேட்டு கொண்டே ரஞ்சித் முன் நின்றாள் அம்மா.
“நேற்று நீங்கள் இருவரும் சென்ற கார் எங்கம்மா” என்றான் ரஞ்சித்.
அம்மா விழித்தாள். அப்பா சட்டென்று அங்கே வந்து “கார் பழுதாகிவிட்டது நேற்று இரவில் செய்வதற்கு கொடுத்திருக்கிறேன் ரஞ்சித்” என்றார்.
ரஞ்சித்துக்கு அப்பா சொன்ன பதில் பொருந்தாத மாதிரியே இருந்தது. காரில் அவன் பயணிக்கும் நேரம் இதே தான் யோசனை அவனுக்கு. கார் பழுதாகி இருந்திருந்தால் என்னை தொடர்பு கொண்டிருப்பாரே. மற்றொன்று வீட்டுக்கு வந்தவுடனே கார் பழுதான விஷயத்தை சொல்லவில்லையே. அந்த இரவு நேரத்தில் யார் கடை திறந்திருப்பார்.
ரஞ்சித் அலுவலகத்துக்கு வந்தவுடன், செயலாளர் ஷங்கரை அழைத்து “நேற்று இரவு யாருடைய கடையில் என் அப்பா காரை செய்ய போட்டிருக்கிறார் என்று கொஞ்சம் கண்டுபிடித்து சொல்லுங்கள் ஷங்கர்” என்று அனுப்பி வைத்தான் ரஞ்சித்.
சில மணி நேரங்கள் கழித்து, ஷங்கர் வந்துய் ரஞ்சித்திடம் சொன்னான், “இந்த சுட்டு வட்டாரத்தில் நேற்று இரவு யாரும் காரை பழுது பார்க்க கொடுக்க வில்லையாம் சார். அதையும் நாங்கள் நம்பாமல் கடைக்கு உள்ளயும் சென்று பார்த்துவிட்டு தான் வந்தோம் அப்பாவுடைய கார் எங்கேயும் இல்லை” என்றான் ஷங்கர்.
“அப்படியென்றால் அப்பா கார் எங்கே? கார் பழுதாகி விட்டது என்று எதற்கு பொய் சொல்லணும். நேற்றிரவு எதோ ஒன்று நடந்திருக்கிறது” என்று ரஞ்சித்தின் மனதினில் எழுந்தது பல கோணங்களில் கேள்விகள்.
மாலை ரஞ்சித் வீடு திரும்பிய போது அப்பாவின் கார் வீட்டில் இருந்தது. அதிர்ச்சியில் ரஞ்சித் அப்பாவிடம் கேட்டான். “அப்பா கார் எப்படி இங்கே, எந்த கடையில் செய்வதற்கு கொடுத்தீர்கள்” என்றான்.
“அந்த செல்வம் கடையிலேதான் செய்வதற்கு போட்டிருந்தேன். அவனிடம் கூட உன் பேரை சொல்லித்தானே போட்டேன்” என்றார் அப்பா.
“இரவு பத்து மணிக்கு கூட செல்வம் கடையை திறந்து இருந்தானா? என்று கேட்டான் ரஞ்சித்.
“இல்லப்பா, போர்டில் உள்ள அலைபேசி என்னை அழைத்து, உன் பெயரை சொன்ன பிறகு உடனே வந்தானே” என்றார்.
“சரிப்பா” என்று மேலும் குழம்பினான், ரஞ்சித். காலையில் ஷங்கர், கடைகளில் விசாரித்த போது செல்வமும் யாரும் கார் செய்ய கொடுக்கவில்லை என்று தானே சொன்னான்.
உண்மை என்னவென்று நாமே தெரிந்து கொள்ள, நாமே செல்வத்தை அழைப்போம் என்று, அலைபேசி எடுத்து செல்வத்துக்கு அழைப்பு விடுத்தான். அவன் “வணக்கம் சார்” என்று கும்பிடு போட்டு, என்ன விஷயம் சார், என்றான்.
“நேற்று என் அப்பா உன்னிடம் கார் பழுது பார்க்க இரவில் கொடுத்தாரா”. என்றான் ரஞ்சித்.
“இல்லை சார், சார், எந்த பழுதாக இருந்தாலும் செய்வேன் சார், வேறு யாருக்கிட்டேயும் கொடுத்துவிடாதீர்கள் சார். என்கிட்டே கொடுத்திருங்க சார்” என்றான்.
சரி செல்வம் என்று அழைப்பை துண்டித்து விட்டு, ரஞ்சித்தின் முகம் கலவரமானது. அப்பா என்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன. நேற்று இரவு முழுதும் கார் எங்கே இருந்தது. உள்ளே வந்து நேரிடையாக அப்பாவிடம் கேட்க எண்ணினான். அப்பாவை தேடி வந்த பொழுது, அப்பாவும் அம்மாவும் ஏதோ ஒன்று சத்தமின்றி ரகசியம் பேசுவது ரஞ்சித்தின் காதில் தற்செயலாக விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் அப்பா என்று அழைத்தான்.
“ஏன் அப்பா கார் பழுதாகி விட்டது, செல்வம் கடையிலேதான் செய்ய போட்டிருக்கிறேன் என்று பொய் சொன்னீர்கள்” என்று கேட்டான் ரஞ்சித்.
“உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டார் அப்பா.
“நானே இதை பற்றி செல்வத்திடம் கேட்டேன். உண்மையை சொல்லுங்கள் அப்பா” என்றான்.
அம்மாவும் அப்பாவும் கண் ஜாடையில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக்கொண்டனர். சற்று நேரத்தில் அப்பா, சொல் ”சரிப்பா நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை, சொல்லிவிடுகிறோம். நேற்று உன் அத்தை வீட்டுக்கு உனக்கு பெண் கேட்டு சென்றிருந்தோம். அங்கே தாமதம் ஆனதால் அவர்களே எங்களை வீடு அனுப்பி வைத்து விட்டு இன்று காரை அனுப்பி வைத்தனர்” என்றார் அப்பா.
ரஞ்சித் சற்று நிமிடம் மௌனம் ஆகிவிட்டான். பெண் பார்த்து விட்டு வந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் சந்தோசம் மறு பக்கம் பயம். சற்று நேரம் கழித்து ஏன் பெண் பார்க்கும் விஷயத்தை என்னிடம் மறைக்க வேண்டும் என்று குழம்பினான்.
அது மட்டும் இன்றி அவர்களிடம் நான் பேசும் பொழுதெல்லாம் “அவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமல் வாயடைத்து போய்விடுகிறேனே. ஏதோ வசியம் செய்த மாதிரி ஆகிவிடுகிறேனே” என்று குழம்பினான் ரஞ்சித்.
இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும். அச்சமயம் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. ரஞ்சித் எழுந்து வந்து கதவை திறந்தான். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் சிரித்த முகத்துடன். நறுமணம் அள்ளி வீசியது.
“யார் நீங்கள்” என்றான் ரஞ்சித்.
“நான்தான் உங்கள் அத்தை பொண்ணு சரண்யா” என்றாள்.
“அப்படியா, சிறு வயதில் பார்த்தது அதான் அடையாளம் தெரியவில்லை. என்ன இந்த நேரத்தில்? உள்ளே வாங்க” என்றான் ரஞ்சித்.
உள்ளே வந்தபடியே, “அப்பா உங்களிடம் எதுவும் சொல்லவிலையா இன்று நான் வருவாதாக”? என்றாள் சரண்யா.
சொல்லவில்லை என்றான் ரஞ்சித்.
“நானும் வெளி நாட்டில் இருந்ததால் உங்களிடம் எல்லாம் பழகியதே கிடையாது, ஆதலால் கல்யாணத்துக்கு முன்பு பேசி பழகி கொண்டால் அப்புறம் பிரச்சனை ஏதும் இருக்காது என்று உங்கள் அத்தையும் என் அத்தையும் விருப்படுறாங்க, அதனால் தான் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது” என்றாள் சரண்யா.
அவளுக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரலாம் என்று திரும்பிய போது, அப்பா அறையிலிருந்து காலடி நிழல் தெரிந்தது. அவர்கள் இன்னும் தூங்க வில்லை போலும், என்று சென்று அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு, சரண்யா வந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லலாம் என அரை கதவை திறந்து பார்த்தால் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள். குழப்பத்துடன் கதவை அடைத்து விட்டு அவளிடம் வந்தான் ரஞ்சித். உள்ளே அப்பாவும் அம்மாவும் கண் விழித்து ஒருவருக்கொருவர் புன்னகைத்து கொண்டனர்.
ரஞ்சித்துக்கு எதுவும் புரியவில்லை, ஒரே மர்மமாக இருந்தது. “இரவு நேரத்தில் எவளோ ஒருத்தி அத்தை பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு வரா. அப்பா இரவில் பெண் பார்த்து விட்டு வந்திருகிறார்கள். ஏன் எல்லாம் இரவிலே நடக்கனும்” யோசனையில் ரஞ்சித்.
காலையில் எழுந்தவுடன் சரண்யா ரஞ்சித்திடம் வந்து “இன்று அலுவலகத்திற்கு போய்த்தான் ஆகணுமா” என்னுடன் நேரத்தை செலவிடலாமே, அப்பொழுதுதான் நமக்குள் ஒரு புரிந்துணர்வு வரும்” என்றாள் சரண்யா.
அம்மாவும் போய்ட்டு வாடா என்றாள். பல இடங்களுக்கு சென்றார்கள். அவளின் கவர்ச்சியும் உடல் அசைவும் ஒரே நாளில் ஈர்த்து விட்டது அவனை அவள் பக்கம். ஊரெல்லாம் சுற்றி விட்டு இரவு தான் வீடு திரும்பினர், திரும்புவதற்கு மனம் இல்லாமல். ஏதோ வசியம் செய்தது போல் திரும்பி வரும் பொழுது அட்டை போல் ஒட்டி கொண்டு வந்தான் அவளுடன். வீட்டுக்கு வந்த பிறகும் அவர்களுள் ஒரே கச்சா முச்சா தான். அவளை அறைக்குள் தள்ளி கட்டி பிடித்து உதட்டில் அழுத்தி முத்தம் கொடுத்தான் ரஞ்சித். கொடுத்து விட்டு தற்செயலாக எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்து விட்டு அதிர்ந்தான். அவள் முகத்தை பார்த்தான், பிறகு கண்ணாடியை பார்த்தான். கண்ணாடியில் தெரிவது அவனின் முன்னாள் காதலி திவ்யாவின் முகம்.
பயந்து ஓடி போய் அம்மாவின் அறையை திறந்தான் அங்கே அம்மாவும் அப்பாவும் காணவில்லை. எதிரே இருந்த கண்ணாடியை பார்த்தான், அவர்கள் இருவரும் உறங்கி கொண்டிருப்பது தெரிந்தது, ஆனால் படுக்கையில் அவர்களை காணன் முடியவில்லை. கண்ணாடியின் மூலம் தான் அவர்களை காண முடிந்தது. அதிர்ந்தான். அப்பா அம்மா என்று கத்தினான். கண்ணாடியில் தெரிந்தது அப்பா விழித்து கொண்டு எழுந்து வருவது. அப்பா என்று கத்தினான். சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் அவனின் கண்ணுக்கு தென்பட ஆரம்பித்தனர். அப்பா அம்மாவின் நகங்களும் பற்களும் நீண்டு கொண்டு போனது. பதறினான் ரஞ்சித்.
“ஏன்டா அவளை கண்ணாடியிலே பார்த்தே” என்று சிவந்த கண்களுடன் ஆக்ரோஷமாக கேட்டார் அப்பா.
ஒரு குடும்பமே பேயாக மாறி போனது ரஞ்சித்துக்கு வேதனையை தந்தது. ஒரு வழியாக தப்பி ஓடி மதுரை வீரன் கோவிலுக்கு வந்தடைந்தான். பூசாரியை சந்தித்து, என் குடும்பமே பேயாக மாறிவிட்டது, நீங்கதான் காப்பத்தனும் என்று நின்றான் ரஞ்சித். பூசாரியும் சற்று நேரம் காத்திருக்க சொன்னார். ரஞ்சித்தும் தன்னுடைய செயலாளர் ஷங்கருக்கு அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அங்கே வரச்சொன்னான். ஷங்கரும் பதரி அடித்துக் கொண்டு வந்தான் ரஞ்சித்தை காண, ரஞ்சித் நடந்தவற்றை சொன்னான்.
“சார், முதலில் நீங்கள் உங்கள் அத்தைக்கு போன் செய்து கேட்டு பாருங்கள், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன நடந்தது என்று தெரியும்”, என்றான் ஷங்கர்.
ரஞ்சித்தும் அத்தைக்கு போன் செய்து கேட்டான், “அத்தை என் அம்மாவும் அப்பாவும் அங்கே வந்தார்களா” என்றான்.
இல்லை ரஞ்சித் என்று அத்தை நலம் விசாரித்து விட்டு வைத்துவிட்டாள்.
அலைபேசியை வைத்துவிட்டு ஷங்கரிடம் சொன்னான், அத்தை கூறியதை.
சற்று நேரத்தில் பூசாரியும் வாருங்கள் என்று ரஞ்சித்தின் வீட்டுக்கு போகும் படி கேட்டார்.
அங்கே பூசாரி பூஜை போட்டதும் மூவரும் மதுரை வீரனின் காலடியில் எங்களை விட்டு விடுங்கள் என்றது.
“யார் நீங்கள்” என்று மதுரை வீரனின் தோரணையில் பூசாரி கேட்க, நாங்கள் ரஞ்சித்தின் அம்மாவும் அப்பாவும் என்றனர்.
பொய் சொல்லாதீர்கள், ரஞ்சித்தின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன நடந்தது, சொல்லுங்கள் என்று கேட்டு கொண்டே விழுந்தது ஒரு சாட்டை அடி உண்மையும் வந்தது.
சரண்யா மட்டும் கடுங் கோபத்தில் இருந்தாள். “யார் நீ” ஐயா கேட்க.
“நான் சரண்யா” என்றாள்.
ஷங்கர் ஐயாவின் காதில் “ஐயா அவள்தான் நீரில் சரண்யா முகம் கண்ணாடியில் ரஞ்சித்தின் காதலி திவ்யா” என்றான்.
அவ்வளுவுதான் விழுந்தது மறுபடியும் ஒரு சாட்டை அடி.
“வலி தாங்க முடியாமல் ஆமாம் நான் திவ்யாதான். என்றது.
“உனக்கு என்ன நடந்தது. ஏன் இவர்களை தொந்தரவு செய்கிறாய்” என்று ஐயா கேட்க.
“என் காதலன் என்னை கெடுத்து கொன்று விட்டான். என்றது.
“என்ன சரவணன் உன்னை கெடுத்து கொன்று விட்டானா? ஆச்சரியத்தில் ரஞ்சித் கேட்டான்.
“ஆமாம் அவன் என் உடலுக்காகத்தான் பழகி இருக்கிறான். எல்லாம் முடிந்த பின் கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்திய போதுதான் என்னை அடித்தே கொன்று விட்டான். உயிருடன் இருக்கும் பொழுது உன் காதலை அலட்சியம் செய்தேன், இறந்த பின்தான் உன் காதல் புரிந்தது. என் மேல் உயிரையே வைத்திருக்கும் உன்னை மீண்டும் அடையவே துடிக்கிறேன், என்னை ஏற்று கொள் ரஞ்சித். வா ரஞ்சித் கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்றது.
“எதற்காக என் அப்பாவையும் அம்மாவையும் கொன்றாய். என்றான் ரஞ்சித்.
அவர்கள் என் ஆசைக்கு தடை விதித்தார்கள் அதனால்தான் கொன்றேன்.என்றது. அத்தை வீட்டுக்கு உனக்காக பெண் கேட்டு போன பொழுது காரை பழுதாக்கி அவர்களின் முன் நின்று உன்னை மணந்து கொள்ள சம்மதம் கேட்டேன். அவர்கள் என் பையனை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுப்பேனே தவிரே ஒரு பேய்க்கு அல்ல என்றார்கள். அதனால்தான் அவர்களையும் பேயாக ஆக்கி விட்டேன். ரஞ்சித் உன்னை கொள்ளும் முன் ஒரு மனிதனாக உன்னை அடைய வேண்டும் நினைத்தேன், அதற்குள் நீ என்னை கண்டுபிடித்து விட்டாய்.
பேய் கொண்டே இருக்கும் பொழுதே கேட்டு கொண்டிருந்த பூசாரியின் உடலில் இருந்த ஐயா தன அரிவாள் கொண்டே ஒரே சீவு. அவர்களின் கழுத்தை பதம் பார்த்தது. காற்றோடு காற்றாக கலந்து போனது.
சில நாட்களில் போலிஸ் துணையோடு ரஞ்சித் தன அம்மா அப்பாவின் சடலத்தை ஒரு குளத்தில் கண்டெடுக்க பட்டது. வேண்டிய காரியங்கள் செய்தான். அவன் அத்தையும் வந்தாள். வருத்தம் தெரிவித்தாள். அவள் அப்பாவின் தங்கையும் கூட. அவளிடம் நடந்ததை சொன்னான். அப்பாவின் விருப்படியே அத்தையும் தன் மகளை கல்யாணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தாள்.
“ரஞ்சித் என் மகள் வெளி நாட்டில் இருக்கிறாள், இந்த மாதம் வந்து விடுவாள். நீ அவளை பார்த்தது இல்லை அல்லவா” என்று புகைப்படத்தை நீட்டினாள்.
அச்சடித்த படி சரண்யாவை போலே இருந்தாள். “அத்தை பெயர் சொல்லவில்லையே”? என்றான் ரஞ்சித்.
சரண்யா. என்றாள் அத்தை.
சரண்யாவும் வெளி நாட்டில் இருந்து வந்ததும் ரஞ்சித்தை பார்க்க வந்தாள். ரஞ்சித் முதலில் பார்த்தவுடன் “உங்கள் பெயர் உண்மையிலே சரன்யாதானா” என்றான்.
அவளும் சிரித்த படியே ஆமாம் என்றாள். அதெல்லாம் இருக்கட்டும் இப்படி கொஞ்சம் வாருங்களேன் என்று கண்ணாடிமுன் நிறுத்தினான். அதில் சரண்யாவின் முகம்தான் தெரிந்தது. ஆமாம் நீங்கள் சரண்யாதான் என்றான் ரஞ்சித்.
மீண்டும் சிரித்தாள் சரண்யா. வாரி கட்டி அணைத்து கொண்டான்.