வனவாசக் காதல்...

கடிகாரச் சுழற்சியென்று
காலங்கள் கடந்து சொல்ல
பூமியின் தற்சுற்றென்று
புரிந்து கொள்வார் யாருமில்லை.

ஆரம்பித்த ஆண்டுகளாய்
வனவாசம் முடிந்தது
முடிவுகள் ஏதும் கிடையாமல்
நாட்கள் நகர்ந்து
நீண்டுசெல்கின்றது

ஆசை மீது ஆசை குவித்து
வெள்ளி நிலாத் தூங்க
ஆசை கொண்ட மனங்கள் இரண்டும்
ஏதோ நினைத்து ஏங்கும்.

கதலுக்கும் சகிப்பு வரும்
எங்கள் காரியங்கள் கண்டு
காரிருளும் கண்டதில்லை -என்
காதல்கண்கள் அன்று.

நிழலையும் நிழல் தொட்டதில்லை.
ஆனாலும் அன்பு குறையவில்லை.
தண்டவாள முதுகு மேலே
தவழ்கின்றது இன்றும் காதல்
கேள்விக் குறிகளோடு,
சமச்சீரான பாதை
சேருமா என்ற ஏக்கங்களோடு,
என்றும் தொடரும் சேர்கைக்காக...

வயது கடந்து
வைதூரியம் பாயும்
கல்சிய மேட்டினிலும்
காபன் படியும்
இலத்திரனியல் வாழ்க்கையையும்
மூலகங்கள் வெல்லும்...

காடு சென்ற இராமன்- தன்
சீதையோடு சென்றான்
நானோ.......!
என் தேவதைக்காக
வனவாசக் காலத்தையும் கழித்தேன்.

விடியலுக்காய்க் காத்திருக்கும்
இருளைப் போல
இன்றும் நான் தவித்திருக்க
சேர்வோமா என்ற கேள்விக் குறி
இன்னும் தடம் மாறவில்லை.

ஆண்டுகள் நகர்ந்தாலும்
ஆசைகள் குறையாமல்
சொற்பன வாழ்க்கையில்
சோராது வாழ்வோம்
சேரும் நாள் தேடி.....

உண்மைக் காதல் பிரியாது,
உயிரும் நகர்ந்து செல்லாது,
உள்ளங்கள் பரிமாறி
உயிர் உள்ளவரை வாழ்வோம்,
நமக்கான பொழுது விடியும் வரை......................

எழுதியவர் : கமல்ராஜ் (18-Jul-11, 9:18 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 325

மேலே